Published:Updated:

மோர்பி பாலம்: ஒதுக்கப்பட்டது ரூ.2 கோடி; பணி நடந்ததோ ரூ.12 லட்சத்துக்கு மட்டுமே? - அதிர்ச்சித் தகவல்

மோர்பி பாலம் ( ட்விட்டர் )

பாலத்தைப் புதுப்பிக்க ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் ஆறு சதவிகிதத்தை மட்டுமே ஓரேவா நிறுவனம் செலவழித்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மோர்பி பாலம்: ஒதுக்கப்பட்டது ரூ.2 கோடி; பணி நடந்ததோ ரூ.12 லட்சத்துக்கு மட்டுமே? - அதிர்ச்சித் தகவல்

பாலத்தைப் புதுப்பிக்க ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் ஆறு சதவிகிதத்தை மட்டுமே ஓரேவா நிறுவனம் செலவழித்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
மோர்பி பாலம் ( ட்விட்டர் )

குஜராத்தில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி, சாத் பூஜை விழாவின்போது 150 வருட பழைமையான, புதுப்பிக்கப்பட்ட மோர்பி கேபிள் பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில், 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக, முறையான தரம் சரிபார்ப்பு இல்லாமல் அவசர அவசரமாகப் பாலம் திறக்கப்பட்டது எனக் குற்றச்சாட்டுகள் எழ, பாலத்தைப் புதுப்பித்த `ஓரேவா' நிறுவனத்தின் முக்கிய நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது, பாலத்தைப் புதுப்பிக்க ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் ஆறு சதவிகிதத்தை மட்டுமே ஓரேவா நிறுவனம் செலவழித்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

குஜராத்: மோர்பி பாலம் விபத்து
குஜராத்: மோர்பி பாலம் விபத்து

அதாவது, பாலம் சீரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில், ரூ.12 லட்சத்தை மட்டுமே அந்த நிறுவனம் செலவழித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கடிகாரங்கள் தயாரிக்கும் ஓரேவா நிறுவனம், உள்கட்டமைப்பில் நிபுணத்துவம் இல்லாததால், திரங்காத்ராவைச் சேர்ந்த தேவ்பிரகாஷ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திடம், பாலத்தைப் புதுப்பிக்கத் துணை ஒப்பந்தம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், துணை ஒப்பந்ததாரருக்கும் இந்தப் பணிக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு இல்லை என்பதைப் புலனாய்வாளர்கள் விசாரணையில் கண்டறிந்திருக்கின்றனர்.

குஜராத்: மோர்பி பாலம் விபத்து
குஜராத்: மோர்பி பாலம் விபத்து

மேலும் விசாரணையின்போது தேவ்பிரகாஷ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களில், பாலத்தைச் சீரமைக்கச் செலவிடப்பட்ட பணம் குறித்த தகவலில், ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில், ரூ.12 லட்சம் செலவிடப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதோடு, துருப்பிடித்த கேபிள்களுக்கு பதில், பெயின்ட்டிங், கிரீசிங் மற்றும் பிற மேலோட்டமான வேலைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.