Published:Updated:

``பட்ஜெட் தாக்கல்செய்து 5 மாதங்களாகியும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படவில்லை..!" - ஓ.எஸ்.மணியன்

ஓ.எஸ்.மணியன்

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஐந்து மாதங்களாகியும், 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டியிருகிறார்.

``பட்ஜெட் தாக்கல்செய்து 5 மாதங்களாகியும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படவில்லை..!" - ஓ.எஸ்.மணியன்

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஐந்து மாதங்களாகியும், 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டியிருகிறார்.

Published:Updated:
ஓ.எஸ்.மணியன்

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஐந்து மாதங்களாகியும், 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டியிருகிறார். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ- வுமான பவுன்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

கூட்டத்தில் பேசிய ஓ.எஸ்.மணியன், ``தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க இரண்டாக உடையப்போகிறது என்று நினைத்தன.  ஆனால் அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஒரே முகமாக 'எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளராக வேண்டும்' என்று முடிவெடுத்தனர். கட்சி பெரிய சோதனைக்கு உள்ளாகப்போகிறது என்ற சூழ்நிலையிலிருந்து, ஆரோக்கியமான நிலைக்கு பழனிசாமியும், கட்சித் தொண்டர்களும் அழைத்துச் சென்றிருக்கின்றனர். தமிழ்நாட்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஐந்து மாதங்களாகியும் இதுவரை எம்.எல்.ஏ-க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறுவைத் தொகுப்புத் திட்டம் கடந்த ஆண்டைவிட பத்தில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. உரத் தட்டுப்பாடு நிலவுகிறது. ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திவருகின்றனர். தி.மு.க அரசு மக்கள் விரோத அரசாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை" என்றார்.

கூட்டம்
கூட்டம்

இந்தக் கூட்டத்தில், ``மினி கிளினிக் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உட்புகாதவாறு தடுப்பணை அமைக்க வேண்டும். ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.