Published:Updated:

``நாட்டின் இன்றைய நிலைமை, எமர்ஜென்சியை விடவும் மோசமாக இருக்கிறது" - அசோக் கெலாட் சாடல்!

அசோக் கெலாட்

சத்தீஸ்கர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த பவன் கேராவை, டெல்லி விமான நிலையத்திலேயே அஸ்ஸாம் காவல்துறை கைதுசெய்தது.

Published:Updated:

``நாட்டின் இன்றைய நிலைமை, எமர்ஜென்சியை விடவும் மோசமாக இருக்கிறது" - அசோக் கெலாட் சாடல்!

சத்தீஸ்கர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த பவன் கேராவை, டெல்லி விமான நிலையத்திலேயே அஸ்ஸாம் காவல்துறை கைதுசெய்தது.

அசோக் கெலாட்

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ஜ.க அளித்த புகாரின்படி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் கேரா மீது அஸ்ஸாம் போலீஸ் வழக்கு பதிவுசெய்திருந்தது. இந்த நிலையில், சத்தீஸ்கரில் இன்று காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த பவன் கேராவை, டெல்லி விமான நிலையத்திலேயே அஸ்ஸாம் காவல்துறை கைதுசெய்தது.

பவன் கேரா
பவன் கேரா
ட்விட்டர்

இதன் காரணமாக மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், நாட்டின் தற்போதைய நிலைமை எமர்ஜென்சியைவிடவும் மோசமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

பவன் கேரா கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பேசிய அசோக் கெலாட், ``நாட்டின் இன்றைய நிலைமை, எமர்ஜென்சியைவிடவும் மோசமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாட்டில் இன்று எந்தவொரு அறிவிப்புமில்லாத, எமர்ஜென்சி போன்ற சூழல் நிலவுகிறது. பவன் கேராவின் கைது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. இதைவிட வேறெதுவும் துரதிஷ்டவசமானதாக இருக்க முடியாது.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

அதனால்தான், ஜனநாயகம் ஆபத்திலிருக்கிறது, அரசியலமைப்புச் சட்டம் தாக்கப்படுகிறது என்று நாங்கள் சொல்கிறோம். அவர்களின் இந்தப் பெருமையெல்லாம் ஒரு வேலையும் செய்யாது. பொதுமக்கள் அதைத் தகர்த்திடுவார்கள்" என்றார். இதற்கிடையில், பவன் கேராவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.