Published:Updated:

``அமைதிக்காக நிற்பதே இந்தியாவின் நிலைப்பாடு!" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

`ரஷ்யா, உக்ரைன் சம்பந்தப்பட்ட சூழ்நிலை எங்கள் பிரச்சனை அல்ல என்பது இந்தியாவின் நிலைப்பாடு அல்ல. நாங்கள் அமைதிக்காக இருக்கிறோம் என்பதே எங்கள் நிலைப்பாடு.' - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

``அமைதிக்காக நிற்பதே இந்தியாவின் நிலைப்பாடு!" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

`ரஷ்யா, உக்ரைன் சம்பந்தப்பட்ட சூழ்நிலை எங்கள் பிரச்சனை அல்ல என்பது இந்தியாவின் நிலைப்பாடு அல்ல. நாங்கள் அமைதிக்காக இருக்கிறோம் என்பதே எங்கள் நிலைப்பாடு.' - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Published:Updated:
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த மாதம் (பிப்ரவரி) 24ம் தேதி தொடங்கப்பட்ட போரானது முழுமையாக ஒரு மாதத்தைக் கடந்தும் இதுவரை முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில், அமெரிக்கா, கனடா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் என உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு உதவும் வகையில் ரஷ்யாவுக்கு எதிராகத் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல், பேச்சுவார்த்தை ஒன்றே போருக்குத் தீர்வு எனக் கூறி நடுநிலை வகித்து வருகிறது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா-வில் நான்கு முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டும், இந்தியா எந்தப் பக்கமும் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Evan Vucci

இதற்கிடையில், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை சலுகை விலையில் இந்தியா வாங்கவிருப்பதாகச் செய்திகள் வெளியானதையடுத்து, ரஷ்யாவுக்கு எதிராக முடிவெடுப்பதில் இந்தியா சற்று நடுங்குகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கூறியது பரபரப்பானது. இந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அப்போது பேசிய ஜெய்சங்கர், ``ரஷ்யா - உக்ரைன் சம்பந்தப்பட்ட சூழ்நிலை எங்கள் பிரச்சனை அல்ல என்பது இந்தியாவின் நிலைப்பாடு அல்ல. நாங்கள் அமைதிக்காக இருக்கிறோம் என்பதே எங்கள் நிலைப்பாடு. எங்கள் கொள்கைகளில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். சர்வதேச ஒழுங்கு ஒருமைப்பாடு மற்றும் மாநிலங்களின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையால் எங்கள் கொள்கை வழிநடத்தப்படுகிறது. மேலும், உக்ரைன் நிலைமையை வர்த்தகப் பிரச்னைகளுடன் இணைப்பதில் எந்த கேள்வியும் இல்லை." என பேசியிருந்தார்.

மேலும் இதே போல் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளது. அவரவர் தகுதியில் அவர்கள் நிற்கிறார்கள்." என வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism