Published:Updated:

அக்னிபத் போராட்டத்தின்போது 2,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து; இழப்பு..? - மத்திய அமைச்சர் தகவல்

ரயில்வேதுறை அமைச்சர் ( ட்விட்டர் )

``அக்னிபத் போராட்டத்தால் நாடு முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன" என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

அக்னிபத் போராட்டத்தின்போது 2,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து; இழப்பு..? - மத்திய அமைச்சர் தகவல்

``அக்னிபத் போராட்டத்தால் நாடு முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன" என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ரயில்வேதுறை அமைச்சர் ( ட்விட்டர் )

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். இதனால் ரயில்வேதுறையின் சொத்துகள் அதிக அளவில் சேதத்துக்குள்ளாகின.

இந்நிலையில் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தால் நாடு முழுவதும் ரத்துசெய்யப்பட்ட ரயில்களின் விவரங்களை ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அக்னிபத்
அக்னிபத்

இது தொடர்பாக அவர் மாநிலங்களவையில், எழுத்துபூர்வமாக பதில் அளித்திருக்கிறார். அதில், `அக்னிபத் போராட்டத்தால் 2,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன. குறிப்பாக ஜூன் 15 முதல் ஜூன் 23 வரை 2,132 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன. அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக, ரயில் சேவைகள் சீர்குலைந்தன. இதன் காரணமாக பயணிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தனித் தரவு பராமரிக்கப்படவில்லை.

14.06.2022 முதல் 30.06.2022 வரையிலான காலகட்டத்தில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தோராயமாக மொத்தம் ரூ.102.96 கோடி திருப்பி அளிக்கப்பட்டது. அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் ரயில்வே சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன. இதன் காரணமாக ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. அக்னிபத் திட்டத்தின் காரணமாக ரத்துசெய்யப்பட்ட அனைத்து பாதிக்கப்பட்ட ரயில் சேவைகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!