Published:Updated:

``ரஷ்யப் போரில் 2,500-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” - உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

உக்ரைன், ரஷ்யா இடையேயான ஏழு வாரப் போரில் 2,500-க்கும் மேற்பட்ட உக்ரைன் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

``ரஷ்யப் போரில் 2,500-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” - உக்ரைன் அதிபர்

உக்ரைன், ரஷ்யா இடையேயான ஏழு வாரப் போரில் 2,500-க்கும் மேற்பட்ட உக்ரைன் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Published:Updated:
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து போர் நடைபெற்றுவருகிறது. உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்துவரும் நிலையிலும், ரஷ்யா அதைப் பொருட்படுத்தாமல் உக்ரைனில் தொடர் தாக்குதலை நடத்திவருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் தொடர் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போரில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தநிலையில், பலர் நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அகதிகளாக அண்டை மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா
ட்விட்டர்

ரஷ்யா- உக்ரைன் போரைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதியில் 900-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அவர்களில் பெரும்பாலோர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று வெள்ளிக்கிழமை போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இது குறித்து, ``உக்ரைன் ரஷ்யா இடையேயான ஏழு வாரப் போரில் 2,500 முதல் 3,000 உக்ரைன் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 10,000 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்தப் போரின் எட்டாவது வாரத்தில் 19,000 முதல் 20,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism