Published:Updated:

எதிர்க்கட்சிகள் கூட்டம்: ``மம்தா அழைக்கவில்லை, அழைத்திருந்தாலும் சென்றிருக்க மாட்டேன்..!" - ஒவைசி

அசாதுதீன் ஒவைசி

மம்தா பானர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க என்னை அழைக்கவில்லை என அசாதுதீன் ஒவைசி தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் கூட்டம்: ``மம்தா அழைக்கவில்லை, அழைத்திருந்தாலும் சென்றிருக்க மாட்டேன்..!" - ஒவைசி

மம்தா பானர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க என்னை அழைக்கவில்லை என அசாதுதீன் ஒவைசி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அசாதுதீன் ஒவைசி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதனால் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த சனிக்கிழமையன்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்கவும், ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடவும் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. மேலும் ஆம் ஆத்மி டி.ஆர்.எஸ் சிரோன்மணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசியில் கருத்து தெரிவித்த ஒவைசி, ``குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க மம்தா பானர்ஜி என்னை அழைக்கவில்லை. அவர் என்னை அழைத்திருந்தாலும் நான் பங்கேற்றிருக்க மாட்டேன். காங்கிரஸ் கட்சியை அவர்கள் அழைத்த காரணத்தினால், நான் சென்றிருக்க மாட்டேன்'' எனக் கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism