Published:Updated:

74 வயது சிதம்பரத்துக்கு 9 உடல் உபாதைகள்! ஜாமீன் பெற புதுக் காரணம் #LeakedDocument

அ.சையது அபுதாஹிர்
மலையரசு

சிதம்பரத்தை மேலும் 15 நாள்களுக்குக் காவலில் வைக்க டெல்லி மேலிடம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

P Chidambaram
P Chidambaram ( ( All India Radio ) )

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் தன் தந்தை ப.சிதம்பரத்தின் உதவியுடன் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.305 கோடி முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐயும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணைக்கு நடுவில் இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்தது சி.பி.ஐ. அதன்படி 14 நாள்கள் சி.பி.ஐ காவலில் வைக்கப்பட்ட சிதம்பரம், பிறகு நீதிமன்ற காவலுக்கு மாற்றப்படுவார் என்ற தகவல் வெளியானது. `சிதம்பரத்திடமிருந்து எந்த உண்மையையும் எங்களால் பெற முடியவில்லை. போதிய ஒத்துழைப்பு எங்களுக்குத் தரவில்லை’ எனக் கூறி சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் காவலை நீட்டிப்பு செய்து வந்தனர்.

P Chidambaram
P Chidambaram

சிபிஐ காவலுக்கு எதிரான மனு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், சிதம்பரத்துக்கு பாதுகாப்பு வேண்டும் என்றார். மேலும், அவரது வயதைக் காரணம் காட்டி, `திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் . வீட்டுக்காவலில் வையுங்கள்; நிபந்தனைகள் விதித்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்' என்றார். சிபிஐ தரப்பு இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சிதம்பரத்தை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறியதுடன், திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு இடைக்காலத்தடை விதித்தது நீதிமன்றம். சிபிஐ காவலை 3 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

சப்பாத்தி... மரப்படுக்கை.. உறக்கமில்லா தவிப்பு! ப.சிதம்பரத்தின் திகார் இரவு

இதன்பின் 6வது முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் கடந்த 5-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், செப்டம்பர் 19-ம் தேதி வரை திகார் சிறையில் தனி அறையில் சிதம்பரத்தை அடைக்க உத்தரவிட்டனர். அதன்படி திகாரில் 7-ம் எண் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, சிதம்பரத்தை மேலும் 15 நாள்கள் காவலில் வைக்க டெல்லி மேலிடம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அதை ஸ்ட்ராங்காக மாற்ற சிதம்பரத்திடம் இன்னும் சில வாக்குமூலங்களை பெறவேண்டி இருப்பதால் அவரின் காவலை நீட்டிக்க டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது எனத் தெரிகிறது.

petition
petition
`உங்களுக்கு அந்த 5 சதவிகிதம் பற்றித் தெரியாதா?’-சிபிஐ காவல் குறித்த கேள்வியும் சிதம்பரத்தின் பதிலும்

ஆனால், இதை உடைத்து சிதம்பரத்துக்கு ஜாமீன் பெற அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் தரப்பு முயன்று வருகிறது. 74 வயதாகும் சிதம்பரத்துக்கு டிஸ்லிபிடிமியா, கரோனரி தமனி நோய் (coronary artery disease), ஹைப்பர் டென்ஷன், கிளைசீமியா, எரிச்சல் கொண்ட குடல் நோய் (irritable bowel disease), புரோஸ்டாடோமேகலீ (prostatomegaly), நுண்ணிய ஹெமாட்டூரியா, கிரோன் நோய் உள்ளிட்ட நோய்க்குறைபாடுகள் இருக்கிறது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் சிதம்பரத்தின் ஜாமீன் வழக்கில் இந்த நோய் குறித்த தகவல்களை எடுத்துக்கூறி ஜாமீன் பெற கபில்சிபல் தரப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜாமீன் மனுவில் இந்த நோய் குறித்த விவரங்களைப் பதிவிட்டுள்ளனர். இந்த மனு தற்போது டெல்லி வட்டாரங்களில் லீக் ஆகியுள்ளது.