Published:Updated:

சிறையில் கடும் அவதி... முகம் வற்றி, உடல் மெலிந்து காணப்படும் ப.சிதம்பரம்!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தோற்றமே வித்தியாசமாக உள்ளது.

முகம் வற்றி காணப்படும் ப.சிதம்பரம்
முகம் வற்றி காணப்படும் ப.சிதம்பரம் ( Hindustan Times )

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடல் மெலிந்து, முகம் வற்றி காணப்படுகிறார். கடந்த 2007-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக ரூ.305 கோடியைத் திரட்ட, ப.சிதம்பரம் ஆதரவாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் சி.பி.ஐ முதலில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 5- தேதி கைதுசெய்தது. அவருக்கு நாளைவரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

தங்களுக்குத் தேவைப்பட்டால் சிதம்பரத்தைக் கைதுசெய்து விசாரிக்கலாம் என்று அமலாக்கத் துறைக்கு தனி நீதிமன்றம் அனுமதியளித்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திகார் சிறைசென்று அவரிடத்தில் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில், அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தைக் கைதுசெய்தது. தற்போது, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அலுவலகத்துக்குக் கொண்டு சென்று விசாரிக்க முடிவுசெய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

`கார்த்திக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்..!’ - சிறைக்குள்ளிலிருந்து செல்லில் பேசிய ப. சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்ட ப.சிதம்பரம், பலமுறை ஜாமீனுக்கு முயன்றபோதும் கிடைக்கவில்லை. இதனால், பல நாள்கள் சிறையிலேயே அடைபட்டுக் கிடக்கும் ப.சிதம்பரம் சோகத்துடன் உள்ளார். சிறையில் யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். சிறை வாழ்க்கை ப.சிதம்பரத்துக் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. சரியாக உணவு உட்கொள்ளாத நிலையில் அவரின் முகம் வற்றி சோகத்துடன் காணப்படுகிறது. உடலும், மெலிந்து போய் உள்ளது.

ப.சிதம்பரம் பண மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர். என் வழக்கையும் அவர்மீது சுமத்தப்பட்ட வழக்கையும் ஒப்பிட முடியாது.
அமித் ஷா

இதற்கிடையே, இந்தியா டுடே டி.வி-க்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில், ``நான் ப.சிதம்பரத்தைக் கைது செய்யவில்லை. சி.பி.ஐ., அமலாக்கத் துறை இரண்டு அமைப்புகளுமே உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படவில்லை. அதேபோல், ப.சிதம்பரமும் என்னைக் கைது செய்யவில்லை. அவர், உள்துறை அமைச்சராக இருந்தபோதும் சி.பி.ஐ., அமலாக்கத் துறை இரண்டுமே அவருக்குக் கீழ் செயல்படவில்லை. நான் போலி என்கவுன்டர் வழக்கில் கைதுசெய்யப்பட்டவன். நீதிமன்றம் என்னைக் குற்றவாளி இல்லை என்று விடுவித்துள்ளது. சிதம்பரம், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர். என் வழக்கையும் சிதம்பரம் வழக்கையும் ஒப்பிட முடியாது. சிதம்பரம் தன்னைக் குற்றமற்றவர் என்று கருதினால், அதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.