Published:Updated:

குடிநீரில் மலம் கலந்த விவகாரம்: ``தொடரும் சமூக அநீதி; பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுவதா?" - பா.இரஞ்சித்

பா.இரஞ்சித்

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாகத் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

குடிநீரில் மலம் கலந்த விவகாரம்: ``தொடரும் சமூக அநீதி; பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுவதா?" - பா.இரஞ்சித்

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாகத் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பா.இரஞ்சித்

புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலைக் குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, வெள்ளனூர் போலீஸார் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். ஆனால், குற்றவாளிகள் யாரும் கைதுசெய்யப்படவில்லை.

மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி
மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி

இந்த நிலையில், குடிநீரில் மலம் கலந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்துவருகின்றனர். இதையடுத்து, திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர் தலைமையில், புதுக்கோட்டை டி.எஸ்.பி ரமேஷ்கிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக சம்பந்தப்பட்ட கிராமத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

சந்தேகத்தின் அடிப்படையில், வேங்கைவயல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட அதே ஊரைச் சேர்ந்த சுமார் 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் அனைவரும் வெள்ளனூர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர். மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, போலீஸார் கூறுகையில், "தொட்டியிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி ஆய்வுக்காக, சென்னை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

இது தொடர்பாக, கிட்டத்தட்ட 70 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருக்கிறோம். விசாரணையானது ஒளிவுமறைவு ஏதும் இல்லாமல், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றுவருகிறது. குற்றவாளிகளை இன்னும் ஓரிரு நாள்களில் கைதுசெய்வோம்" என்றனர்.

இந்த நிலையில், திரைபட இயக்குநர் பா.இரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தொடரும் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய முயலாமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டிவரும் தமிழக காவல்துறைக்குக் கடும் கண்டனங்கள்!!

வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களைச் சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.