Published:Updated:

``பாஜக-வின் வெற்றிக்கு வித்திட்ட மாயாவதி, ஒவைசிக்கு பத்ம விருது வழங்கலாம்!" - சிவசேனா

சஞ்சய் ராவத்

``பாஜக வெற்றிக்கு வித்திட்ட மாயாவதி, ஒவைசிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கவேண்டும்” என்று சிவசேனா கருத்து தெரிவித்திருக்கிறது.

``பாஜக-வின் வெற்றிக்கு வித்திட்ட மாயாவதி, ஒவைசிக்கு பத்ம விருது வழங்கலாம்!" - சிவசேனா

``பாஜக வெற்றிக்கு வித்திட்ட மாயாவதி, ஒவைசிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கவேண்டும்” என்று சிவசேனா கருத்து தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
சஞ்சய் ராவத்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் மாயாவதியின் பகுஜன் சமாஜ் , அசாதுதீன் ஒவைசியின் கட்சி ஆகியவை படுதோல்வியை சந்தித்தன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத், ``பாஜக-வின் வெற்றிக்கு மாயாவதி, ஒவைசி சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனவே அவர்களின் பங்களிப்புக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவிக்கப்பட வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் 42 இடத்தில் இருந்து 100-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மாயாவதி
மாயாவதி

முன்பு பெற்றதை விட சமாஜ்வாடி கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. ஆனால் மாயாவதி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார். ஒவைசி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இரு கட்சிகளும் சமாஜ்வாடி கட்சியின் வெற்றியை தடுத்துவிட்டது” எனக் குற்றம் சாட்டினார்.

தேர்தல் தோல்வி குறித்து மாயாவதி அளித்த பேட்டியில், ``தேர்தல் முடிவுகள் பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்பார்ப்புக்கு எதிராக இருக்கிறது. இதற்காக நாம் சோர்ந்துவிடக்கூடாது. மாறாக இத்தேர்தல் முடிவுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நமது கட்சி எதிர்காலத்தில் ஆட்சிக்கு வருவதற்கு பாடமாக அமையும். 2017-ம் ஆண்டுக்கு முன்பு பாஜக இருந்தது போன்று நாம் இப்போது கடினமாக காலக்கட்டத்தில் இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியும் அது போன்ற ஒரு நிலையில் தான் இருக்கிறது. ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்ற பாடத்தை உத்தரப்பிரதேசத் தேர்தல் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism