Published:Updated:

``மோடி தலைமையிலான அரசில் கலைஞர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை..!"- பத்மஸ்ரீ விருதாளரின் மகள் சாடல்

பத்மஸ்ரீ விருதாளர் குரு மாயாதர் ராவத்

ஒ.டி.சி நடனக் கலைஞரும், பத்மஸ்ரீ விருதாளருமான குரு மாயாதர் ராவத், டெல்லி அரசு விடுதியிலுருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து, `மோடி தலைமையிலான அரசில் கலைஞர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை' என அவரின் மகள் சாடியிருக்கிறார்.

``மோடி தலைமையிலான அரசில் கலைஞர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை..!"- பத்மஸ்ரீ விருதாளரின் மகள் சாடல்

ஒ.டி.சி நடனக் கலைஞரும், பத்மஸ்ரீ விருதாளருமான குரு மாயாதர் ராவத், டெல்லி அரசு விடுதியிலுருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து, `மோடி தலைமையிலான அரசில் கலைஞர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை' என அவரின் மகள் சாடியிருக்கிறார்.

Published:Updated:
பத்மஸ்ரீ விருதாளர் குரு மாயாதர் ராவத்

90 வயதான ஒ.டி.சி நடனக் கலைஞரும், பத்மஸ்ரீ விருதாளருமான குரு மாயாதர் ராவத், டெல்லி ஆசிய விளையாட்டு கிராமத்தில் உள்ள அரசு விடுதியிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார். அதையடுத்து, ராவத்தின் மகள் மதுமிதா ராவத், ``மோடி தலைமையிலான அரசில் கலைஞர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை" எனக் கூறியிருக்கிறார்.

2014-ல் அரசு, ராவத் உட்பட 28 கலைஞர்களின் தங்குமிட உரிமையை ரத்து செய்ததையடுத்து, அவர்களால் தொடரப்பட்ட வழக்கில், ஏப்ரல் 25 அன்று அவர்கள் வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேற்று அதிகாரிகளால் ராவத்தின் உடைமைகள் வெளியே வீசப்பட்டு, விடுதியிலிருந்து ராவத் வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து, ராவத்தின் மகள் மதுமிதா ராவத், அதிகாரிகளின் இந்த செயலையும், மத்திய அரசையும் கடுமையாகச் சாடினார். அப்போது பேசிய மதுமிதா, ``அரசு 2014-லேயே இந்த முடிவை முடிவெடுத்திருக்கலாம். ஆனால் 2020-ல்தான் கலைஞர்களுக்கு இது தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த வெளியேற்றம் சட்டப்பூர்வமானது என்றாலும், அதைச் செய்த விதம் என்பது முற்றிலும் ஆட்சேபனைக்குரியது. பிரதமர் மோடி தலைமையிலான அரசில் கலைஞர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை" என மத்திய அரசை கடுமையாகச் சாடினார்.

பத்மஸ்ரீ விருதாளர் குரு மாயாதர் ராவத்
பத்மஸ்ரீ விருதாளர் குரு மாயாதர் ராவத்

மேலும் தொடர்ந்து பேசிய மதுமிதா, ``இந்த அரசாங்கத்தின் முன்னுரிமையில் நாங்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறோம். அரசின் இந்த வெளியேற்றத்துக்கு நான் எதிரானவள் ஒன்றுமல்ல. ஆனால் அரசின் இந்த செயல் மனிதாபிமானமற்றது. நான் மட்டும் அப்போது என் தந்தையுடன் இல்லாமல் போயிருந்தால், அவர் இறந்துகூட போயிருக்கலாம். இத்தனை வருடங்கள் இந்த நாட்டுக்கு சேவை செய்து, தன் சீடர்களுக்கு கலையை கற்பித்ததன் மூலம் ஒரு ரூபாய் கூட அவர் சம்பாதிக்கவில்லை. அவருக்கென்று சொத்துகள் ஏதுமில்லை, அவருடைய வங்கிக் கணக்கில் வெறும் ரூ.3,000 மட்டுமே உள்ளது. அப்படியிருக்கையில் இதை எப்படி அவர்களால் செய்ய முடியும்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோடி
மோடி

இந்த நடவடிக்கை தொடர்பாக பேசிய அதிகாரியொருவர், ``மொத்தம் 28 கலைஞர்களில் 8 பேர், பல அறிவிப்புகளுக்குப் பிறகும் தங்களின் அரசு தங்குமிடங்களை விட்டு வெளியேறவில்லை. இருப்பினும் தற்போது 8 பேரும் தங்களின் இருப்பிடங்களை மே 2-ம் தேதிக்குள் காலி செய்வதாக எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு உறுதிமொழி அளித்திருக்கின்றனர். அதுவரை நாங்கள் அவகாசம் அளித்திருகிறோம்" எனக் கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism