Published:Updated:

பொருளாதார நெருக்கடி: அரசு சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்கும் பாகிஸ்தான் - அமைச்சரவை ஒப்புதல்!

பாகிஸ்தான் - ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசு சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்கும் அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

பாகிஸ்தானில் கடந்த ஒரு வருடமாகப் பொருளாதாரச் சிக்கல் நீடித்துவருகிறது. அதனால், பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனாலும் இன்னும் பொருளாதார நெருக்கடி நீடித்துவருகிறது. மேலும் பணப்பற்றாக்குறையும் அதிகரித்திருக்கிறது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, நாட்டின் தேசிய சொத்துகளை விற்க முடிவு செய்திருக்கிறது. தேசிய சொத்துகளை விற்று வெளிநாட்டுக் கடனை அடைக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இதற்கான அவசரச் சட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.

புழல் சிறையில் பாகிஸ்தான் கொடி...!
புழல் சிறையில் பாகிஸ்தான் கொடி...!

இந்த நிலையில், அரசு மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட சொத்துகளை விற்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அரசின் சொத்து விற்பனை திட்டத்துக்கு எதிரான வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பது மாதிரியான அம்சங்களும் இந்தச் சட்டத்தில் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!