Published:Updated:

``பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்” - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ( Jose Luis Magana )

``இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் இருக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

காா்கில் போா் வெற்றிநாள் நிகழ்ச்சி ஜம்மு காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த, இருக்கின்ற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், வருங்காலத்திலும் தொடர்ந்து இந்தியாவுடனேயே இருக்கும். அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியா அண்டை நாட்டுடன் நட்புறவுகொள்ள விரும்புகிறது. ஆனால் அவர்கள் ஏன் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. வலிமையான புதிய இந்தியா தீய நோக்கம் கொண்டவர்களுக்கு பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
ட்விட்டர்

நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காப்பாற்ற உயிா்த் தியாகம் செய்தவா்களை நாடு ஒருபோதும் மறக்காது. அந்த வீரா்களுக்கும், அவா்களின் குடும்பத்துக்கும் உரிய மரியாதை வழங்கும். அந்தப் பொறுப்பும், கடமையும் நாட்டு மக்களுக்கு இருக்கிறது. அவா்களுக்குரிய மரியாதையை ஒவ்வொரு குடிமகனும் வழங்க வேண்டும்’’ என்றாா்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!