Published:Updated:

`ஆதாரம் இல்லாத எதையும் நம்ப வேண்டாம்'- பி.டி.ஆர் உதாரணம் காட்டிய ‘Heart on My Sleeve’ பாடல்!

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

‘Heart on My Sleeve’ என்ற முழு பாடலில் வரும் குரல்கள் முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதுதான்.

Published:Updated:

`ஆதாரம் இல்லாத எதையும் நம்ப வேண்டாம்'- பி.டி.ஆர் உதாரணம் காட்டிய ‘Heart on My Sleeve’ பாடல்!

‘Heart on My Sleeve’ என்ற முழு பாடலில் வரும் குரல்கள் முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதுதான்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அண்மையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மருமகன் சபரீசன் இருவரும் முறைகேடாக 30,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்றை பா.ஜ.க-வினர் வெளியிட்டிருந்தனர். இதுகுறித்து  திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - அண்ணாமலை
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - அண்ணாமலை

இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அந்த ஆடியோவிற்கு மறுப்பு தெரிவித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார். “ நான் பேசியதாக சமூக வலைதளங்களில் பகிரபட்டு வரும் ஆடியோ கிளிப் போலியானது. எனக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதலுக்கு நான் ஒருபோதும் காவல்துறையில் வழக்குத் தொடர்ந்ததில்லை. இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது இருக்கும்  தொழில் நுட்பத்தின் உதவியால் யார் வேண்டும் என்றாலும் இதுபோன்ற ஒரு ஆடியோவை உருவாக்க முடியும் என்று உதாரணத்திற்கு ‘Heart on My Sleeve’ என்ற ஆங்கில பாடல் ஒன்றைக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அந்த பதிவில்,  இன்றைய காலக்கட்டத்தில் 26 வினாடிகளுக்கு தரம் குறைந்த ஒரு ஆடியோ கிளிப்பை உருவாக்குவது கடினம் என்று நினைத்தால்… அதற்கு உதாரணம் 16 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த  ‘Heart on My Sleeve’ என்ற முழு பாடலில் வரும் குரல்கள் முழுக்க முழுக்க  AI தொழில் நுட்பத்தின்  மூலம் உருவாக்கப்பட்டதுதான். அதனால் ஆதாரம் இல்லாத எந்த ஒரு ஆடியோ கிளிப்பையும் யாரும்  நம்ப வேண்டாம் என்று அப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.  

‘Heart on My Sleeve’ என்ற பாடலை பொறுத்தவரைக்கும் Drake மற்றும் Weeknd என்ற பிரபல பாடகர்கள் அவர்களது குரல்களில் முழுப் பாடலையும் பாடுவது போன்று  AI தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த பாடல் வெளியாகி ஸ்பாட்டிஃபையில் 6 லட்சம் பார்வையாளர்களையும், டிக் டாக்கில் 15 மில்லியன்  யூடியூபில் 2,75,000 பார்வையாளர்களையும் கடந்திருக்கிறது. ஆனால் ஏப்ரல் 17 அன்று விதி மீறல்களின் அடிப்படையில் அனைத்து தளங்களில் இருந்தும் இந்த பாடல்  நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.