Published:Updated:

ரேஷன் கடைகளுக்கு பாமாயில், பருப்பு வழங்கும் நிறுவனங்களில் ஐடி ரெய்டு... முக்கிய ஆவணங்கள் சிக்கியது?!

வருமான வரித்துறை ( ட்விட்டர் )

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தமான 80 இடங்களில் வருமான வரித்துறை நடத்திவரும் சோதனையில் முக்கியமான ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரேஷன் கடைகளுக்கு பாமாயில், பருப்பு வழங்கும் நிறுவனங்களில் ஐடி ரெய்டு... முக்கிய ஆவணங்கள் சிக்கியது?!

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தமான 80 இடங்களில் வருமான வரித்துறை நடத்திவரும் சோதனையில் முக்கியமான ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Published:Updated:
வருமான வரித்துறை ( ட்விட்டர் )

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு பொருள்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து தான் அரசு கொள்முதல் செய்து வருகிறது. அதன்படி, பருப்பு வகைகள், பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருள்களை தேவையின் அடிப்படையில் மாதம் ஒருமுறை அல்லது இரு மாதங்களுக்கு ஒருமுறை டெண்டர் மூலம் அரசு கொள்முதல் செய்கிறது. இதில், அருணாச்சலா இம்பெக்ஸ், இன்டகிரேட்டடு சர்வீஸ் பாயின்ட், காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட நிறுவனங்கள்தான் அதிகப்படியான பொருள்களை சப்ளே செய்து வருகிறது.

வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறை சோதனை

இந்நிலையில், சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலா இம்பெக்ஸ், தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில், காமாட்சி அண்ட் கோ, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இன்டகிரேட்டடு சர்வீஸ் பாயின்ட் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், உரிமையாளர்களின் வீடு மற்றும் நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்கள் என தமிழ்நாடு முழுவதும் 80 இடங்களில் 23-ம் தேதி அதிகாலையில் இருந்து சோதனை தற்போது வரை நடந்து வருகிறது.

வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடைபெறும் இந்த சோதனையில் அதற்கான முக்கிய ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வருகிறது. குறிப்பாக, இந்த நிறுவனங்களுக்கு அதிகாரமட்டத்தில் இருக்கும் நெருக்கமான தொடர்பை உறுதி செய்யும் சில முக்கிய கோப்புகளும் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறை சோதனை

இதுகுறித்து வருமான வரித் துறை உயர் அதிகாரிகள் சிலர் நம்மிடம் பேசும்போது, ``தற்போது எங்கள் சோதனை வளையத்துக்குள் சிக்கியிருக்கும் மூன்று நிறுவனங்களும்தான் அரசுக்கு அதிகப்படியான உணவு பொருள்களை வழங்கி வருகிறது. சென்னையை மையமாக வைத்து இயங்கும் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகுதான், பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கான டெண்டர்கள் அதிகமாக கிடைத்திருக்கிறது.

இதன்பின்னர், இந்நிறுவனங்கள் அபரீதமாக வளர்ச்சி அடைவதை நாங்கள் கண்காணித்து வந்தோம். இதற்கிடையே, இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகாரும் வந்தது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி, 21 வகையான பொருள்கள் அடங்கிய ‘பொங்கல் பரிசுத் தொகுப்பை’ வழங்கியதில் அருணாச்சலா இம்பெக்ஸ், இன்டகிரேட்டடு சர்வீஸ் பாயின்ட் ஆகிய இரு நிறுவனங்களுக்கு அதிக பங்கு இருக்கிறது. இந்தத் தொகுப்பில், சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், தரமற்ற பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் அடுக்கடுக்கானப் புகார்கள் எழுந்தும், நிறுவனங்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது.

வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறை சோதனை

இதன் பின்னால் சில அரசியல் முகங்கள் இருக்கலாமென்று நாங்கள் சந்தேகித்தோம். முன்னதாக, கொரோனா நிவாரண பொருள்கள் வழங்கியதிலும் இந்நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறது. இவ்வாறு அரசின் எல்லா திட்டங்களிலும் இந்நிறுவனங்கள் இருப்பதை சேர்த்து பின்னர்தான், சோதனையில் இறங்கினோம். அதன்படி, இந்த கொள்முதலுக்கு பின்னால் இருக்கும் இடைத்தரகர்கள், அதிகாரிகளின் பெயர் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டிருந்த ஒரு டைரி சிக்கியிருக்கிறது. அதில் பருப்பு, பாமாயிலுக்கு கமிஷன் எவ்வளவு என்பது போன்ற கணக்கு எழுதப்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழ்நாடு வாணிபக் கழகத்தை தொடர்புப்படுத்தும் மூன்று முக்கிய ஆவணங்களும் கிடைத்திருக்கிறது. இதனை முழுமையாக ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர் விரிவாக...