Published:Updated:

``திமுக-வின் தேர்தல் அறிக்கை... புழுகு மூட்டையின் மறுவடிவம்" - ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

ஓ.பன்னீர்செல்வம்

``அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவருமே வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர்" - ஒ.பன்னீர் செல்வம்

``திமுக-வின் தேர்தல் அறிக்கை... புழுகு மூட்டையின் மறுவடிவம்" - ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

``அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவருமே வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர்" - ஒ.பன்னீர் செல்வம்

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம்

பகுதி நேர ஆசிரியர்களின் பணியை உறுதிசெய்யக் கோரி ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை பாகம் 57-ல் 181 வது வரிசை எண்ணில் இடம்பெற்றுள்ளது.

குமுறும் ஆசிரியர்கள்
குமுறும் ஆசிரியர்கள்

ஆனால், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இந்த வாக்குறுதி குறித்து முதலமைச்சர் மௌனம் சாதிப்பது 'பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து புலவர் பெருமானே' என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளை தான் நினைவுபடுத்துகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகால தி.மு.க அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையே புழுகு மூட்டையின் மறு வடிவமாக காட்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில், பல ஆண்டுகளாக இளைஞர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக விளங்கும் உடற்கல்வி, ஓவியம், தையல், கட்டடக்கலை, தோட்டக்கலை, இசை, வாழ்வியல் திறன் போன்றவற்றை போதிக்கும் உன்னதமான பணியை 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற சிறப்பு பாடங்கள் மாணவ மாணவியர் தங்களுடைய தனித்திறமையை தங்களுக்கு விருப்பமான பாடங்களில் வளர்த்துக் கொள்ள வழி வகுப்பதோடு மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் சுயவேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொள்வதற்கும் பெரிதும் உதவும். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களை பயிற்சிவிக்கும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. நிரந்தரப் பணியில் உள்ள ஆசிரியர்கள் மேற்கொள்கின்ற அதே பணியை பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகள் மேற்கொண்டு வந்தாலும், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் வெறும் ரூ10,000 தான். பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் சமயத்தில் கூறி அவர்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க, ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அது குறித்து மௌனம் சாதிப்பது என்பது, நம்பி வாக்களித்த பகுதி நேர ஆசிரியர்களை வஞ்சிக்கும் செயல். இதற்கு அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவருமே வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர்.

தற்போது மின் கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டிருக்கிறது, சொத்துவரி உயர்த்தப்பட்டதால் வீடு வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்கள் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்தநிலையில் அரசு அளிக்கும் ரூ.10,000 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு தங்களுடைய குடும்பத்தை காப்பாற்ற முடியாத அவல நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். மேலும் கடன் சுமையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் அல்லல்பட்டுக்கொண்டு இருக்கும் ஆசிரியர்களின் பணியை தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப நிரந்தரம் செய்வது குறித்தோ, அவர்களுடைய சம்பளத்தை உயர்த்துவது குறித்தோ, அவர்களுக்கு இதர சலுகைகள் அளிப்பது குறித்தோ அரசு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது. தேர்தல் நேரத்தில் தி.மு.க அளித்த வாக்குறுதிக்கு செவி சாய்த்து வாக்களித்ததாகவும், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகவும் தங்களுடைய கோரிக்கைக்கு செவி சாய்க்க தி.மு.க அரசு மறுத்துவருவதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். தங்களுடைய பணி நிரந்தர கோரிக்கை உட்பட அனைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே பகுதி நேர ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு ஏற்ப பகுதி நேர ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்யும்படி அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும்படி முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.ல்