Published:Updated:

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனுக்கு ஏற்பட்ட அவமதிப்பு; நடத்துனர் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

சச்சின் சிவா

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனை பேருந்தில் ஏற்றாமல் நடத்துனர் அவமானப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனுக்கு ஏற்பட்ட அவமதிப்பு; நடத்துனர் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனை பேருந்தில் ஏற்றாமல் நடத்துனர் அவமானப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சச்சின் சிவா

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் மதுரையைச் சேர்ந்த சிவக்குமார் என்ற சச்சின் சிவா.

இவர் சென்னையிலிருந்து மதுரை வருவதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதியுடன்கூடிய அரசு விரைவுப் பேருந்தில் (TN01 AN 3213) ஏறியிருக்கிறார்.

சச்சின் சிவா
சச்சின் சிவா

அப்போது, இந்தப் பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என ஏற விடாமல் நடத்துனர் தடுத்திருக்கிறார். இது போன்ற பேருந்துகளில் பயணிக்க எங்களுக்கு அனுமதி இருக்கிறது என சச்சின் சிவா கூற, பதிலுக்கு நடத்துனர் ஏறக் கூடாது எனத் தடுக்க அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து சச்சின் சிவா அதே பேருந்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது, 'நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது' என நடத்துனர் மிரட்டல் விடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அங்கு வந்த காவல்துறையினர் முன்பாகவே, 'நீ மதுரைக்கு வா பார்த்துக்கொள்ளலாம்' என நடத்துனர் மிரட்டல் விடுத்துச் சென்றிருக்கிறார். இதையடுத்து மற்றொரு பேருந்தில் மிகுந்த சிரமத்துடன் சச்சின் சிவா பயணித்து ஊர் வந்திருக்கிறார். தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை வீடியோவாகப் பதிவிட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பந்தப்பட்ட பேருந்து
சம்பந்தப்பட்ட பேருந்து

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு சச்சின் சிவா புகார் கடிதமும் அனுப்பியிருக்கிறார். இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கே இது போன்ற நிலையென்றால், அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் மற்ற மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர்களுக்கு என்ன மாதிரியான அவமானங்கள் ஏற்படும், சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதை விசாரித்த அரசுப் போக்குவரத்துக் கழகம் சம்பந்தப்பட்ட நடத்துனர் ராஜாவை இடை நீக்கம் செய்திருக்கிறது.