Published:Updated:

தேசிய சின்னத்துக்கு அவமதிப்பா? - எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பும் பின்னணியும்

தேசிய சின்னம் திறப்புவிழா ( ட்விட்டர் )

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்ட தேசிய சின்னம் சுமார் 9,500 கிலோ எடையும், 6.5 மீட்டர் உயரமும்கொண்டது. இந்த பிரமாண்ட வெண்கலச் சிலையை, கடந்த ஜூலை 11-ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

தேசிய சின்னத்துக்கு அவமதிப்பா? - எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பும் பின்னணியும்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்ட தேசிய சின்னம் சுமார் 9,500 கிலோ எடையும், 6.5 மீட்டர் உயரமும்கொண்டது. இந்த பிரமாண்ட வெண்கலச் சிலையை, கடந்த ஜூலை 11-ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

Published:Updated:
தேசிய சின்னம் திறப்புவிழா ( ட்விட்டர் )

புதிதாகக் கட்டப்பட்டுவரும் நாடாளுமன்றக் கட்டடத்தின் மேற்பரப்பில் நான்கு சிங்கங்களைக்கொண்ட இந்தியாவின் தேசிய சின்னம் நிறுவப்பட்டது. சுமார் 9,500 கிலோ எடையும், 6.5 மீட்டர் உயரமும்கொண்ட இந்த பிரமாண்ட வெண்கலச் சிலையை கடந்த ஜூலை 11-ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்தார். அப்போதே அரசியலமைப்பின்படி அரசு, நீதித்துறை என அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசுத் தலைவராக இருக்கும் மோடி நாடாளுமன்றத்துக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் இருக்கும் அதிகாரப் பகிர்வுக்கு எதிராகச் சிலை திறந்துவைத்திருக்கிறார் என்றும், விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களுக்குக்கூட அழைப்பு விடுக்காமல் தன்னிச்சையாகத் திறந்து வைத்திருக்கிறார் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

தேசிய சின்னம் திறப்புவிழாவின்போது மோடி
தேசிய சின்னம் திறப்புவிழாவின்போது மோடி
ட்விட்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், பிரதமர் மோடி திறந்துவைத்த தேசிய சின்னம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் தேசிய சின்னம் அவமதிக்கப்பட்டுவிட்டதாகவும் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எதிர்க்கட்சிகள் விமர்சனம்:

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி-யுமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ``நரேந்திர மோடி அவர்களே, தேசிய சின்னத்திலுள்ள சிங்கத்தின் முகத்தை கவனியுங்கள். சாரநாத்திலுள்ள சிலையில் இருக்கும் சிங்கங்களின் உருவத்தை அவை பிரதிபலிக்கின்றனவா அல்லது கிர் காடுகளிலுள்ள சிங்கத்தின் சிதைக்கப்பட்ட உருவமாக அவை இருக்கின்றனவா என்பதைப் பாருங்கள். அதைச் சரிபார்த்து உரிய மாற்றத்தைச் செய்யுங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மற்றொரு காங்கிரஸ் எம்.பி-யான கெளரவ் கோகோய், ``நாடாளுமன்றமும் தேசிய சின்னமும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். தனிமனிதருக்கானது அல்ல" என்று கூறியிருக்கிறார்.

ஆதிர் ரஞ்சன் சௌத்ரி
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

அதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஜவஹர் சிர்கார், ``நமது தேசிய சின்னமான அசோகரின் கம்பீரமான நான்கு சிங்கங்களுக்கு அவமானம் ஏற்பட்டிருக்கிறது. உண்மையான சிங்கங்கள் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றன. நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள மோடி வெர்ஷன் சிங்கங்கள், உறுமிக்கொண்டும் தேவையில்லாத ஆக்ரோஷத்துடனும், சரியான அளவிலும் இல்லாமல் இருக்கின்றன. இது அவமானம்! அதை உடனே மாற்றியமைக்க வேண்டும்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும், திரிணாமுல் கட்சி எம்.பி மஹுவா மொய்த்ரா மற்றும் பிற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் அசோகரின் சிங்கத்தின் படத்தையும், நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள சிங்கத்தின் படத்தையும் அருகருகே பகிர்ந்து தங்கள் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர்.

ஜவஹர் சிர்கார்
ஜவஹர் சிர்கார்
விக்கிபீடியா

லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, ``தேசிய சின்னத்திலுள்ள சிங்கங்கள் அவற்றின் மென்மையான வெளிப்பாட்டுக்காகப் பெயர் பெற்றவை. புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிலையிலுள்ள சிங்கங்கள் மனிதனை உண்ணும் தன்மையில் இருக்கின்றன" என்று ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது.

இவை தவிர,வரலாற்று ஆய்வாளர் எஸ்.இர்ஃபான் ஹபீப், ``நமது தேசிய சின்னத்தில் தலையிடுவது தேவையற்றது; அதுமட்டுமின்றி தவிர்க்கக்கூடியது. நமது சிங்கங்கள் ஏன் சீற்றத்துடன் காணப்பட வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்,``நமது தேசிய சின்னத்தில் உள்ள சிங்கங்கள் அமைதியாகவும் கண்ணியமாகவும் அமர்ந்துள்ளன. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின்மீது வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தில் சிங்கங்கள் கூர்மையான, கோரமான பற்களுடன் கோபத்தில் இருக்கின்றன. இதுதான் மோடியின் புதிய இந்தியா" என்று விமர்சித்திருக்கிறார்.

அனில் பலுனி
அனில் பலுனி
twitter

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துப் பேசியிருக்கும் பா.ஜ.க தலைமைச் செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி, ``எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறுவது அவர்களின் அரசியல் உள்நோக்கத்தையே காட்டுகிறது" என தெரிவித்திருக்கிறார்.

பழைய சிலை - புதிய சிலை
பழைய சிலை - புதிய சிலை

சிற்பி சுனில் தியோரின் விளக்கம்:

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டிருக்கும் புதிய தேசிய சின்னத்தை வடிவமைத்த சிற்பி சுனில் தியோர் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது, ``இந்தப் புதிய சிலை, சாரநாத்திலுள்ள தேசிய சின்னத்தின் மாதிரி வடிவம்தான். இந்தப் புகைப்படங்கள் சிற்பத்தின் கீழேயிருந்து எடுக்கப்பட்டிருப்பதால், ஆக்ரோஷமாகவும், வாய் பெரிதாக இருப்பது போன்றும் தோன்றுகிறது" என விளக்கமளித்திருக்கிறார்.