Published:Updated:

ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; 2 கட்டங்களாக நடத்த முடிவு!

நாடாளுமன்றம்
News
நாடாளுமன்றம்

நடப்பு 2022 - 23-ம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் எனப் பல தரப்பினரிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஒவ்வொரு பட்ஜெட்டும் நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், எதிர் வரும் நிதியாண்டுக்கான நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, நடப்பு 2022 - 23-ம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்வார் என்றும் அறிவித்துள்ளது. இந்த கொரோனா நெருக்கடியில் மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் பெரும் மூலதன செலவுகளைச் செய்துள்ளன.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

அதுவும் கொரோனா இரண்டாம் அலைக்குப் பின்பு பொருளாதாரம் மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பும் நிலையில், தற்போது மூன்றாம் அலை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே கொரோனா பெருந்தொற்றால் நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசுகளும் மூலதனசெலவுகளை பெருமளவில் செய்து கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருப்பதன் காரணத்தால், பொருளாதார சுழற்சி மீண்டும் கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு தொடங்கியுள்ளது. இதனால் அதை வேகப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதால், தொழில் துறையினர் மத்தியில் இந்த பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஜனவரி 31-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.