Published:Updated:

மே.வங்கம்: அமைச்சர் குறித்த கருத்து... திரிணாமுல் பொதுச்செயலாளர் ட்வீட்டால் கட்சியில் சலசலப்பு!

பொதுச்செயலாளர் குணால் கோஷ் ( ட்விட்டர் )

``அமைச்சர் மற்றும் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் பார்த்தா சாட்டர்ஜியை உடனடியாக நீக்க வேண்டும்." - பொதுச்செயலாளர் குணால் கோஷ்

மே.வங்கம்: அமைச்சர் குறித்த கருத்து... திரிணாமுல் பொதுச்செயலாளர் ட்வீட்டால் கட்சியில் சலசலப்பு!

``அமைச்சர் மற்றும் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் பார்த்தா சாட்டர்ஜியை உடனடியாக நீக்க வேண்டும்." - பொதுச்செயலாளர் குணால் கோஷ்

Published:Updated:
பொதுச்செயலாளர் குணால் கோஷ் ( ட்விட்டர் )

மேற்கு வங்க மாநிலத்தில், ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மேற்கு வங்க தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அமைச்சர் பரேஷ் அதிகாரி உட்பட 12 பேர் இல்லங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தினர். இதில் வெளிநாட்டு கரன்சி, முக்கிய ஆவணங்கள், தங்கம் உட்பட ஏராளமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூலை 23-ம் தேதி மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டார்.

பார்த்தா சாட்டர்ஜி
பார்த்தா சாட்டர்ஜி

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான குணால் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அமைச்சர் மற்றும் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் பார்த்தா சாட்டர்ஜியை உடனடியாக நீக்க வேண்டும். இந்த அறிக்கை தவறு என்று கருதினால், என்னை அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்க கட்சிக்கு முழு உரிமை உண்டு. நான் கட்சியின் தொண்டராக என்னுடைய பணியைத் தொடர்வேன்” என்று பதிவிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பார்த்தா சாட்டர்ஜியைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்ட குணல் கோஷ், திடீரென அந்தப் பதிவை நீக்கியிருக்கிறார். பின்னர் ட்விட்டரில், ``என்னுடைய கருத்தைத்தான் முதலில் தெரிவித்திருந்தேன். இன்று மாலை ஐந்து மணிக்கு அபிஷேக் பானர்ஜி தலைமையில் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். நானும் கலந்துகொண்டு என்னுடைய கருத்தை முன்வைப்பேன்'' என்று பதிவிட்டிருக்கிறார்.

குணல் கோஷின் ட்விட்டர் பதிவுகள் அந்த மாநில திரிணாமுல் காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.