`வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும்’ என்ற மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் `வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வையும் அமைப்புரீதியாக மூன்றாகப் பிரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகள் கட்சியினரிடையே எழ ஆரம்பித்துவிட்டன.

சமீபத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி காட்பாடியில் நடந்தது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி உட்பட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

சோளிங்கர் எம்.எல்.ஏ-வான சம்பத் பேசும்போது, ‘வேலூர் மண்ணின் மைந்தராக இருந்த அமைச்சர் வீரமணி, இப்போது திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராக மாறிவிட்டார். நமக்கும் அவருக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது. வேலூர் மாவட்டத்தில் இடமில்லாமல்போனாலும், அமைச்சருக்கு நம் இதயத்தில் எப்போதும் இடம் உண்டு’ என்று பேச, இதை சற்றும் எதிர்பார்க்காத வீரமணி ‘ஏம்பா... அதுக்குள்ள என்னைத் துரத்தபார்க்கிறீர்களே..!’ என்றார்.

‘‘கட்சிக்கான புது மாவட்டம் குறித்த கோரிக்கைதான் அந்த நிகழ்ச்சியில் எதிரொலித்தது’’ என்று சொல்லும் அ.தி.மு.க பிரமுகர்கள், ‘‘மாநகரம், மத்திய மாவட்டம், கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் என நான்கு மாவட்டங்களாகப் பிரித்து தி.மு.க-வில் கட்சிப் பணிகளைச் செய்கிறார்கள். இதர கட்சிகளும் அமைப்புரீதியாக வேலூர் மாவட்டத்தை நான்காகவோ ஐந்தாகவோ பிரித்திருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க-வில் கிழக்கு, மேற்கு என்று இரண்டு மாவட்டங்களை மட்டும் வைத்து கட்சிப் பணிகள் நடக்கின்றன.

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணிதான் மேற்கு மாவட்டச் செயலாளர். அரக்கோணம் எம்.எல்.ஏ-வான சு.ரவிதான் கிழக்கு மாவட்டச் செயலாளர். எம்.எல்.ஏ-வான ரவி புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் அடங்கிவிட்டார். அமைச்சர் வீரமணியோ திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகிவிட்டார். இதைத்தான் காட்பாடி விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியின்போது சோளிங்கர் எம்.எல்.ஏ-வான சம்பத் சுட்டிக்காட்டினார்.

சீரமைக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வுக்கான தலைமை இல்லாமல் இருக்கிறது. எனவே, வேலூர் பகுதியை உள்ளடக்கி அமைப்புரீதியாக புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். அதில் சீரமைக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு பதவி அளிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கட்சிப்பணியாற்ற இந்த மாற்றத்தை உடனடியாகச் செய்தாக வேண்டும்.

இல்லையெனில், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க பெரும் பின்னடைவைச் சந்திக்கும். எனவே, இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

வேலூர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி, சொந்த கட்சியினரின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா?