Published:Updated:

அன்று இரட்டை இலை, இன்று உதயசூரியன்... இது புதுக்கோட்டை மின்கம்ப அரசியல்!

மின்கம்பங்கள்

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் சிலை முதல் அரசு மகளிர் கலைக் கல்லூரி வரையிலும் உள்ள மின்விளக்குக் கம்பங்களில் உதயசூரியன் சின்னம் போன்ற மின்விளக்குகள் பொருத்தப்பட்டுவருகின்றன.

அன்று இரட்டை இலை, இன்று உதயசூரியன்... இது புதுக்கோட்டை மின்கம்ப அரசியல்!

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் சிலை முதல் அரசு மகளிர் கலைக் கல்லூரி வரையிலும் உள்ள மின்விளக்குக் கம்பங்களில் உதயசூரியன் சின்னம் போன்ற மின்விளக்குகள் பொருத்தப்பட்டுவருகின்றன.

Published:Updated:
மின்கம்பங்கள்

புதுக்கோட்டை பேருந்து நிலையம் பகுதியிலுள்ள சாலையின் நடுவே, கடந்த ஆட்சிக்காலத்தில் இரட்டை இலை வடிவத்தில் இருப்பதுபோல மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது அப்போது பொதுமக்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

புதிய பேருந்து நிலையம் முதல் மகளிர் கல்லூரி வரையிலும் உள்ள மின்விளக்குக் கம்பங்கள் அ.தி.மு.க-வின் கட்சிச் சின்னமான இரட்டை இலை வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தன. பொது இடங்களில், கட்சிச் சின்னங்களை வைக்கக் கூடாது என்பதை மீறி அரசு நிதியில் வைக்கப்பட்டிருக்கும் இரட்டை இலைச் சின்ன மின்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கடந்த 2020-ம் ஆண்டு தி.மு.க வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் தி.மு.க-வினர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதையடுத்து, இரட்டை இலை வடிவிலான மின்கம்பங்கள் உடனடியாக அகற்றப்பட்டன.

உதயசூரியன் வடிவிலான மின்கம்பங்கள்
உதயசூரியன் வடிவிலான மின்கம்பங்கள்

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 8-ம் தேதி (நாளை) நலத்திட்ட உதவிகள் வழங்க புதுக்கோட்டை வரவிருக்கிறார். இதையொட்டி சிறப்பு ஏற்பாடாக புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் சிலை முதல் அரசு மகளிர் கலைக் கல்லூரி வரையிலும் உதயசூரியன் சின்னம் வடிவிலான மின்விளக்குக் கம்பங்கள் பொருத்தப்பட்டுவருகின்றன. இது பொதுமக்களை முகம்சுளிக்க வைத்திருக்கிறது.

``அன்று அ.தி.மு.க ஆட்சியில் இரட்டை இலை வடிவம் போன்ற மின்கம்பங்கள் வைக்கப்பட்டபோது, அதைக் கண்டித்து மனு கொடுத்து குரல் எழுப்பியவர்கள், இன்று தி.மு.க ஆட்சியமைத்ததும் தங்கள் கட்சியின் சின்னத்தை மின்கம்பங்களில் திணிப்பது முறையல்ல. மாவட்ட நிர்வாகம் உடனடியாக உதயசூரியன் சின்னத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மின்கம்பங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism