Published:Updated:

`ஜெகனின் நோக்கமே வேற; இவரின் செயலால் 20,000 பேர் வேலை இழந்துட்டாங்க!'- பவன் கல்யாண்

பவன் கல்யாண்
News
பவன் கல்யாண் ( Twitter/@JanaSenaParty )

`வரும் காலங்களில் கட்சியின் நிலை பொறுத்தே கூட்டணி தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படும்’ என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் ஆந்திர அரசியலில் வளர்ந்து வரும் தலைவராக உள்ளார். அவர் ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் நகருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு பொதுமக்களையும் தன் கட்சித் தொண்டர்களையும் நேரில் சந்தித்துப் பேசிவருகிறார்.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்
Twitter/@JanaSenaParty

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பவன் ஆளும் கட்சியின் செயல்முறைகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். `` ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, ஆந்திராவில் நடைபெற்று வந்த போலவரம் மற்றும் அமராவதி போன்ற மிக முக்கியத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தெரிந்தும், தெரியாமலும் 20,000 மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் மலிவான அரசியலால் ஆந்திராவின் நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் முதிர்ச்சியற்ற முடிவுகளால் ஆந்திரா, முதலீட்டு வாய்ப்புகளை நழுவவிடுகிறது. அனைத்தும் அறிந்த தலைவர்களே இதுபோன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது. தெலங்கானா பிரிக்கப்பட்டது போன்ற முக்கிய பிரச்னைகளுக்கே இந்திய அரசு எளிதாகத் தீர்வு கண்டது. ஆனால், கபு பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் ஜெகனால் எந்த முடிவும் எடுக்க முடிவில்லை. அவர் இதை அரசியலாகப் பார்க்கிறார்.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்
Twitter/@JanaSenaParty

போலவரம் முதல் கபு பிரிவின் ஒதுக்கீடுவரை முந்தைய ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகள், திட்டங்கள் போன்றவற்றை ரத்து செய்யும் ஒரே நோக்கத்துடனே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி செயல்படுகிறது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.