Published:Updated:

அதீத வேகம்; கார் மேல் அமர்ந்து பயணித்த பவன் கல்யாண் - வைரலான வீடியோ... வெடித்த சர்ச்சை!

பவன் கல்யாண்

நடிகர் பவன் கல்யாண், காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி நெடுஞ்சாலையில் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

அதீத வேகம்; கார் மேல் அமர்ந்து பயணித்த பவன் கல்யாண் - வைரலான வீடியோ... வெடித்த சர்ச்சை!

நடிகர் பவன் கல்யாண், காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி நெடுஞ்சாலையில் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

Published:Updated:
பவன் கல்யாண்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பவன் கல்யாண், ஜனசேனா என்ற கட்சியையும் நடத்திவருகிறார். இவரை தெலுங்கு ரசிகர்கள் `பவர் ஸ்டார்' பவன் கல்யாண் என்று அழைத்துவருகின்றனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான இவர், அண்மையில் ஆந்திராவின் குண்டூரில் சாலைப் பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்றிருக்கிறார்.

அதற்காக பவன் கல்யாண் ஆந்திராவின் குண்டூரிலுள்ள தன் கட்சித் தொண்டர்களுடன் காரில் சென்றிருக்கிறார். மற்ற அரசியல்வாதிகளைப்போல் காரினுள் அமராமல், காரின் மேற்கூரையில் உட்கார்ந்துகொண்டு, காரின் இருபுறமும் தொண்டர்கள் நிற்க, பவன் கல்யாண் சென்றார். அவருக்கு முன்னாலும் பின்னாலும் கார்கள், பைக்குகளில் தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர். இந்த நிலையில், பைக்குகளில் சென்றவர்கள் ஹெல்மெட்கூட அணியவில்லை எனப் புகார் எழுந்திருக்கிறது. சினிமா காட்சியை மிஞ்சும் அளவுக்கு பவனின் பேரணி அமைந்துவிட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

இந்த நிலையில், ``பவன் கல்யாண் இது மாதிரியான செயல்கள் மூலம், பொறுப்பற்ற தவறான முன்னுதாரணத்தை அமைத்திருக்கிறார். இளைஞருக்கு இதன் மூலம் அவர் சொல்லும் செய்தி என்ன... எதிர்பாராமல் ஏதாவது நடந்தால் அந்தக் குடும்பங்களுக்கு யார் பொறுப்பு... இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இளைஞர்கள் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்ற வாய்ப்பிருக்கிறது. ஓர் அரசியல் கட்சித் தலைவர் இப்படிச் செய்வது முறையல்ல" என சமூக வலைதளங்களில் இணையவாசிகள் பலரும் வைரலாகிவரும் இந்த வீடியோ குறித்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.