Published:Updated:

``நிலக்கரி இருந்தும் மின்சாரத் தட்டுப்பாடு... மோடி அல்ல காங்கிரஸ்தான் காரணம்!" - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் ( P.Chidambaram )

நாட்டின் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் மோடி அரசு அல்ல, 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிதான் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

``நிலக்கரி இருந்தும் மின்சாரத் தட்டுப்பாடு... மோடி அல்ல காங்கிரஸ்தான் காரணம்!" - ப.சிதம்பரம்

நாட்டின் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் மோடி அரசு அல்ல, 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிதான் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

Published:Updated:
ப.சிதம்பரம் ( P.Chidambaram )

தமிழகம் உட்பட ஆந்திரா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா என மொத்த 12 மாநிலங்களில் கடந்து சில நாள்களாகவே மின்சாரத் தட்டுப்பாடு நிலவுவதாக மத்திய அரசைப் பலரும் விமர்சித்து வந்தனர். போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு இல்லாததே இதற்கு காரணம் எனப் பலரும் கூறிவருகின்றனர். இதுதொடர்பாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்கூட, ``மாநிலத்தில் ஏற்படும் மின்வெட்டுக்கு முக்கிய காரணம் மத்திய அரசு தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 750 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டதுதான்" என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, `கடந்த எட்டு ஆண்டுகளாக வெற்று வார்த்தைகளால் மாய பிம்பத்தை உருவாக்கி வருகிறார் பிரதமர். நாட்டில் எட்டு நாள்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன' என மோடியை ட்விட்டரில் விமர்சித்திருந்தார்.

தொடர்ந்து நிலக்கரி பற்றாக்குறையே மின்வெட்டுக்கு முக்கிய கரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, நிலக்கரி சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் ரயில்வே துறை, 42 பயணிகள் ரயில்களை ரத்து செய்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், இத்தகைய மின்சார தட்டுப்பாட்டு நிலைக்குக் காரணம் மோடி அரசு அல்ல, 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர், ``ஏராளமான நிலக்கரி... பெரிய ரயில் நெட்வொர்க்... அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தப்படாத ஆற்றல். ஆனாலும், கடுமையான மின் பற்றாக்குறை உள்ளது. இதற்கெல்லாம் மோடி அரசு காரணமல்ல. 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம். நிலக்கரி, ரயில்வே அல்லது மின்சாரத்துறை அமைச்சகங்களில் ஒன்றும் திறமையின்மை இல்லை, குற்றம் சாட்டப்பட்டுள்ள துறைகளின் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்களிடம்தான் அது உள்ளது. அரசு சரியான தீர்வைக் கண்டறிந்துள்ளது... பயணிகள் ரயில்களை ரத்து செய்து நிலக்கரி ரேக்குகளை இயக்குங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism