Published:Updated:

"பெகாசஸ், ரஃபேல்... எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் முறியடிப்பு" - நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பணமதிப்பிழப்பு, ரஃபேல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் முறியடிக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

"பெகாசஸ், ரஃபேல்... எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் முறியடிப்பு" - நிர்மலா சீதாராமன்

பணமதிப்பிழப்பு, ரஃபேல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் முறியடிக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அதற்கான வேலைகளை ஏற்கெனவே பா.ஜ.க தொடங்கிவிட்டது. அதற்கான முன்னேற்பாடாக பா.ஜ.க-வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், கர்நாடக சட்டசபைத் தேர்தல் உட்பட வரும் தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியானது.

ரவிசங்கர் பிரசாத், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், "2014 முதல் நாட்டின் சாதனைகளில் கவனம் செலுத்தியது பா.ஜ.க. இங்கிலாந்தைவிட இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியிருக்கிறது. இந்தியா இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக இருக்கிறது. 2013-14ல் செல்போன்களை இறக்குமதி செய்ததில் இருந்து, நாம் இப்போது செல்போன்களை ஏற்றுமதி செய்கிறோம். வரும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது.

பூத் அளவில் கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்திவருகிறோம். நாடு முழுவதும் 100 மக்களவைத் தொகுதிகளில் 72,000 வாக்குச்சாவடிகள் குறிக்கப்பட்டன, அங்கு பா.ஜ.க பலவீனமாக இருந்தது. அவை பா.ஜ.க அடையவேண்டிய இடங்கள். ஆனால், நாங்கள் 1.3 லட்சம் சாவடிகளை அடைந்து கட்சியின் கொள்கைகளைப் பரப்பினோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

அதைத் தொடர்ந்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பெகாசஸ், ரஃபேல், அமலாக்கத்துறை, சென்ட்ரல் விஸ்டா, இட ஒதுக்கீடு, பணமதிப்பு நீக்கம் என ஆதாரமற்ற கூற்றுக்கள் மூலம் எதிர்க்கட்சிகள் பிரதமரைக் குற்றம் சாட்டின. ஆனால், அவர் அவை அனைத்தையும் எதிர்கொண்டு முறியடித்தார்" எனத் தெரிவித்திருக்கிறார்.