Published:Updated:

பெகாசஸ் வழக்கு: விசாரணைக்குழுவுக்கு அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

'பெகாசஸ்' விவகாரம்

பெகாசஸ் விசாரணைக்குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசத்தை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெகாசஸ் வழக்கு: விசாரணைக்குழுவுக்கு அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பெகாசஸ் விசாரணைக்குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசத்தை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published:Updated:
'பெகாசஸ்' விவகாரம்

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவிலுள்ள பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில், ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரின் செல்போன் எண்களும் இடம்பெற்றிருந்தன. இதன் காரணமாக பெகசாஸ் விவகாரம் குறித்து ஆராயத் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணைக்குழு தரப்பில், இதுவரை 29 போன்கள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் பிற நிபுணர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.

இதையொட்டி, விசாரணைக்குழுவுக்கு அறிக்கையைத் தாக்கல் செய்ய ஜூன் 20-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism