Published:Updated:

`மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்; தமிழகம் மாறிவருகிறது!' - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

``வரலாறு எப்படியெல்லாம் திரிக்கப்படுகிறது என்பதை அனைவரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். கல்வி, அறிவு மட்டுமே யாராலும் ஒருபோதும் அழிக்க முடியாதவை” - அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``கோயில்கள் மூடுவது பற்றித் தமிழக மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. விரைவில் ராமகோபாலன் விரும்பிய தமிழகமாக மலரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்திலுள்ள எம்.பி-க்கள் ஜி.எஸ்.டி பற்றி முழுமையாகத் தெரியாமல் பேசுகிறார்கள்" என்று பாஜக தலைவர் அண்ணாமலை ஆளும்கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

அண்ணாமலை: உதயநிதி மீது வழக்கு பதிய வேண்டும்| காங்கிரஸின் நிலை வேதனை - கபில் சிபல்|Quicklook

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனத் தலைவர் மறைந்த ராமகோபாலனின் முதலாமாண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அதை முன்னிட்டு திருச்சியிலுள்ள அவரின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``சுதந்திரப் போராட்ட காலத்தில் பிறந்து, பல்வேறு நல்ல விஷயங்களைச் செய்தவர் ராமகோபாலன். திராவிட கழகத்தைப் பார்த்தவர். 1980-ல் மீனாட்சிபுரம் பிரச்னையின்போது மதம் மாறுவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தவர்.

அண்ணாமலை
அண்ணாமலை

அன்று ராமகோபாலன் இல்லையென்றால் தமிழகம் எங்கு சென்றிருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இந்து என்பது வாழ்வியல் முறை. ஆங்கிலேயரின் வரவுக்குப் பின்னர், அவர்கள் அதை மதத்துக்குள் இணைத்துவிட்டனர். இந்து வாழ்வியல் முறைக்குச் சில சிக்கல்கல்கள் வந்தபோது ராமகோபாலன் முன்னின்று அந்தச் சிக்கல்களைக் களைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`பள்ளிகளைத் திறப்பது காலத்தின் கட்டாயம்’ - உள்ளாட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அண்ணாமலை!

ஆங்கிலேயர் திணித்த இந்து மதக்கோட்பாடை, மீண்டும் இந்து வாழ்வியல் முறையாக மாற்றிக் காட்டியவர் ராமகோபாலன். இந்த வரலாறு எல்லோருக்கும் தெரியும். நான் அவரைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவுக்கு உயர்வான மனிதர்.

பாஜக நிர்வாகிகள்
பாஜக நிர்வாகிகள்

வார இறுதி நாள்களில் கோயில்களை மூட வேண்டும் உள்ளிட்ட திமுக அரசு எடுக்கும் முடிவுகளை, அமைப்புகளைத் தாண்டி பொதுமக்களே கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. விரைவில் ராமகோபாலன் விரும்பிய தமிழகமாக மலரும்.

அண்ணாமலை
அண்ணாமலை

இதில் எந்த மாற்றமும் இல்லை. வரலாறு எப்படியெல்லாம் திரிக்கப்படுகிறது என்பதை அனைவரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். கல்வி, அறிவு மட்டுமே யாராலும் ஒருபோதும் அழிக்க முடியாதவை. இதற்கு முதலில் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும். ஜி.எஸ்.டி என்றால் என்னவென்று தெரியாமல் தமிழக எம்.பி க்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்று பேசி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு