Published:Updated:

`திண்டுக்கல் சீனிவாசனை யாரும் தடுக்கவில்லை!' - ஊட்டி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை?

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவனிடம் நடந்துகொண்ட செயல் மனித உரிமை மீறலாக மாறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் 48 நாள்கள் நடைபெறும் புத்துணர்வு முகாமில் இருந்த குறும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களை அழைத்து அதில் ஒரு‌ சிறுவனை தனது காலணிகளைக் கழற்றச்செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர், பழங்குடி அமைப்புக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்தப் பழங்குடியின சிறுவன் மசினகுடி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தான். இந்தப் புகாரில் `என் பெயர் பிரபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் 9-ம் வகுப்பு பயின்று வருகிறேன். உறவினர் துக்க நிகழ்வில் பங்கேற்றதால் பள்ளிக்குச் செல்லவில்லை. யானை முகாமில் நடைபெற்ற விழாவைப் பார்க்க வந்தேன். அமைச்சர், என்னை அழைத்து காலணியைக் கழற்றிவிடச் சொன்னார். பயத்தில் கழற்றிவிட்டேன். அருகில் மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் இருந்தனர். யாரும் தடுக்கவில்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய பழங்குடியின செயற்பாட்டாளர் வீரப்பன், ``அமைச்சர் பங்கேற்ற இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுஷல், இணை இயக்குநர் சென்பகபிரியா, காவல் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் என ஆட்சி அதிகாரத்தில் உள்ள பலரும் வேடிக்கை பார்த்தபடியே இருந்தனர்.

`திண்டுக்கல் சீனிவாசனை யாரும் தடுக்கவில்லை!' - ஊட்டி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை?

இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் என இவர்களுக்கும் தெரியாதா? இவர்கள் இதை தடுத்திருக்கக் கூடாதா? எனவே, இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வேடிக்கை பார்த்த அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு