Published:Updated:

பேரறிவாளன்: ``விடுதலை என்ற முழுமை நிலையை எட்ட இன்னும் காலம் கைகூடவில்லை." - அற்புதம் அம்மாள்

பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

பேரறிவாளன்: ``விடுதலை என்ற முழுமை நிலையை எட்ட இன்னும் காலம் கைகூடவில்லை." - அற்புதம் அம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

Published:Updated:
பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்தார்.

பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்திருப்பது 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தாயின் பாசப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி எனப் பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். பேரறிவாளன் இன்று காலை புழல் மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவரின் தாயார் அற்புதம் அம்மாள், வழக்கறிஞர்கள் ஆகியோர் அவரை வரவேற்றனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அவரின் தாயார் அற்புதம் அம்மாள் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ``நீதிக்கான 31 ஆண்டுக்கால நீண்ட போராட்டத்தில் மிகவும் முக்கியமான காலகட்டம் இது. விடுதலை என்ற முழுமை நிலையை எட்ட காலம் இன்னும் கைகூடவில்லை என்ற நிலையில், கிடைத்திருக்கிற இந்தப் பிணை ஓர் இடைக்கால நிவாரணம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அற்புதம் அம்மாள்
அற்புதம் அம்மாள்

என் புதல்வன் உள்ளிட்ட அனைவரும் முழுமையான விடுதலையைப் பெறுகின்றவரை, உங்கள் அனைவரின் ஆதரவு அவசியம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு எங்கள் போராட்டம் தொடர்கிறது. இதுவரை காலமும், எங்களின் நீதிக்கான போராட்டத்துக்கு துணை நின்று வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அற்புதம் அம்மாள்
அற்புதம் அம்மாள்

தமிழகத்திலும், தமிழகம் தாண்டியும் உள்ள வெகுமக்களின் ஆதரவும் புரிதலுமே 31 ஆண்டுகளுக்குப் பிறகாவது இந்த நிலையை எட்டக்கூடிய வாய்ப்பைத் தந்துள்ளது. முழுமையான விடுதலை கிடைத்து, அதற்கான சூழல் ஏற்படும் நாளில் விடுதலைக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லும் வாய்ப்புக்காக நானும் அறிவும் காத்திருக்கிறோம்'' என்று பேசினார்.

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேரறிவாளன் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism