Published:Updated:

ஆளுநர், மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்த விவாதத்தை கிளப்பியிருக்கிறதா பேரறிவாளன் வழக்கு!

பேரறிவாளன்

இந்த வழக்கு பேரறிவாளன் விடுதலையைத் தாண்டி, ஆளுநருக்கான அதிகாரம் குறித்து ஒட்டுமொத்தமாக பல்வேறு விவாதங்களை உண்டாக்கியுள்ளதாகக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆளுநர், மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்த விவாதத்தை கிளப்பியிருக்கிறதா பேரறிவாளன் வழக்கு!

இந்த வழக்கு பேரறிவாளன் விடுதலையைத் தாண்டி, ஆளுநருக்கான அதிகாரம் குறித்து ஒட்டுமொத்தமாக பல்வேறு விவாதங்களை உண்டாக்கியுள்ளதாகக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

Published:Updated:
பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடுத்த வழக்கில் மத்திய அரசுக்கும், ஆளுநரின் அதிகாரம் குறித்தும் பல்வேறு கேள்விகளை அடுத்தடுத்து எழுப்பிவருகிறது உச்ச நீதிமன்றம். பேரறிவாளன் விடுதலையைத் தாண்டி, அரசியலமைப்பில் ஆளுநருக்கு என்ன அதிகாரம், மாநில அமைச்சரவைக்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக ஆளுநர் இயங்க முடியுமா, கூட்டாட்சித் தத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவாதங்களை அரசியல் அரங்கில் உண்டாக்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்கள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்கள்

கடந்த 2018, செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனுமீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கவே, அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளன். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனப் பலமுறை எச்சரித்து, ஒரு முறை காலக்கெடுவும் விதித்தனர். ஆனால், ஏழு பேர் விடுதலை குறித்த ஆவணங்களை குடியரசுத் தலைவருக்கு கவர்னர் அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் பேரறிவாளன் தொடுத்திருந்த வழக்கு கடந்த ஏப்ரல் 27-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ``அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப்பெரிய பாதகமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மேலும், மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?'' என்கிற பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தனர். தொடர்ந்து அரசியல் அரங்கில் அது மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், அண்மையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ``வழக்கின் நேரத்தை மத்திய அரசு வீணடிக்கிறது. மாநில அரசின் முடிவு அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிராக இருக்கும்போது ஆளுநர் குடியரசுத் தலைவரிடம் முறையிடலாம். ஆனால், இந்த வழக்கில் எந்த விதியின் கீழ் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார்" எனப் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். மேலும், ``இந்த வழக்கில் ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்... எந்த விதியின் கீழ் மாநில அரசின் ஆளுநருக்காக மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகிறீர்கள்... ஆளுநருக்காக மாநில அரசுதான் வாதிட வேண்டும், மத்திய அரசு கிடையாது. ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும் மூன்று ஆண்டுகள் முடிவெடுக்காமல் இருந்தது ஏன்... இதற்கு முன்பே பேரறிவாளன் விவகாரத்தில் நீதிமன்றம் முடிவெடுக்கும் எனக் கூறியிருந்தபோது, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பதாகக் கூறியிருந்தீர்கள். ஆனால், இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும், இது கிரிமினல் வழக்குதானே, கிரிமினல் வழக்கில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா... கொலை வழக்கில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மத்திய அரசு கூறுவதுபோல உள்ளது" எனப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர், ``புலனாய்வுத்துறை மத்திய அரசின் அதிகாரத்தில் வருகிறது" என விளக்கமளித்தார். உடனே நீதிபதிகள், ``கருணை விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தானே ஆளுநர்" எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், தமிழக அரசும் வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு பேரறிவாளன் விடுதலையைத் தாண்டி, ஆளுநருக்கான அதிகாரம் குறித்து ஒட்டுமொத்தமாக பல்வேறு விவாதங்களை உண்டாக்கியுள்ளதாகக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

வழக்கறிஞர் பிரபு
வழக்கறிஞர் பிரபு

பேரறிவாளனின் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரபுவிடம் இது குறித்துப் பேசினோம்.

``ஒரு சிறைவாசியை விடுதலை செய்ய அமைச்சரவை எடுத்த முடிவை, ஆளுநர் ஏன் இழுத்துக்கொண்டிருக்கிறார் என்கிற அளவில்தான் ஆரம்பத்தில் விவாதங்கள் நடந்துவந்தன. ஆனால், தற்போது மாநில அமைச்சரவையின் முடிவை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், முடிவெடுக்காமல் தாமதப்படுத்துவதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா என்கிற இடத்தில் வந்து விவாதம் நிற்கிறது. அதுமட்டுமல்ல, ஆளுநருக்காக மத்திய அரசு வாதாட முடியுமா என்கிற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினர். மாநில அரசு யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் போய்விடக் கூடாது என்கிற நிர்வாகக் காரணங்களுக்காகத்தான் கவர்னரை `ஹெட் ஆஃப் தி ஸ்டேட்' என்று சொல்கிறோம். அதேவேளை, மத்திய அரசும், கவர்னர் மூலமாக மாநில அரசில் அதிகாரம் செலுத்தவும் கூடாது. அதுதான் வரையறை. ஆனால், அமைச்சரவையைவிட கவர்னர் தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று அவராகவே நினைத்துக்கொள்கிறார், ஆனால் அதிகாரம் கிடையாது என்பதுதான் உண்மை.

அதன் காரணமாகத்தான் நீதிபதிகள், ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்கிற கருத்துகளை ஏற்கெனவே தெரிவித்திருக்கின்றனர். அதோடு, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையான சாரம்சம் எப்படி இருக்க வேண்டும் என்பது வரையான விவாதங்கள் தற்போது எழுந்திருக்கின்றன. எனவே, இந்த விவகாரம் பேரறிவாளன் விடுதலை, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேருக்குமான விடுதலை எப்படிச் சாத்தியமாகும் என்பதைத் தாண்டி, மத்திய, மாநில அரசுகளுக்கான அதிகாரம், ஆளுநருக்கான அதிகாரம் குறித்த விவாதங்கள் என அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது'' என்கிறார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் இந்த விவகாரங்கள் குறித்துப் பேசினோம்.

``சி.பி.ஐ உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் விசாரித்து தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம், மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது என ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தெளிவாகத் தீர்ப்பளித்துவிட்டது. இந்த நிலையில், 161 பிரிவின் கீழ் இந்த விஷயத்தில் மாநில அரசு முடிவெடுக்கிறது என்றால் அந்த மனுவை மத்திய அரசுக்குத்தான் ஆளுநர் அனுப்ப முடியும். நீதிமன்றத்தில் தற்போது நடந்துகொண்டிருப்பது வாதப் பிரதிவாதங்கள்தானே தவிர, தீர்ப்பல்ல. `நம் நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொலை செய்தவர்களை விடுவிடுத்தால், பின்னால் மிகப்பெரிய பின்விளைவுகள் உண்டாகும். அதனால், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யக் கூடாது' என மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக அறிவித்துவிட்டது. நீதிமன்றம் விடுவித்தால், எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்பதுதான் தமிழக பா.ஜ.க-வின் நிலைப்பாடு. ஆனால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில், `வழக்கு முடிந்துவிட்டது, இனிமேல் எங்களால் தலையிட முடியாது' என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டது. தற்போது பேரறிவாளன் தொடுத்த தனி வழக்கில்தான் வாதப் பிரதிவாதங்கள் நடந்துவருகின்றன. மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனக் கருத்து தெரிவித்துவிட்டார். அதனால், முழுமையான தீர்ப்பு வரட்டும்'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism