Published:Updated:

ஹவாலா வழக்கு: `எங்கள் அமைச்சர் தூய்மையானவர்; வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்'-கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் ( ட்விட்ட்ர் )

"நேற்று பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தூய்மையானவர்." - அரவிந்த் கெஜ்ரிவால்

ஹவாலா வழக்கு: `எங்கள் அமைச்சர் தூய்மையானவர்; வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்'-கெஜ்ரிவால்

"நேற்று பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தூய்மையானவர்." - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால் ( ட்விட்ட்ர் )

ஆம் ஆத்மி கட்சியின் தேசியத் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தனது அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டதற்கு மத்திய அரசசைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் - செய்தியாளர் சந்திப்பின்போது, ``ஆம் ஆத்மி கட்சி ஒரு நேர்மையான அரசியல் கட்சி. இந்த வழக்கில் ஒரு சதவிகிதம் உண்மை இருந்திருந்தால்கூட சத்யேந்தர் ஜெயின் மீது நானே நடவடிக்கை எடுத்திருப்பேன். எனது அரசு எந்த ஊழலையும் செய்யவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ ​​செய்யாது.

சத்யேந்தர் ஜெயின்
சத்யேந்தர் ஜெயின்
ட்விட்டர்

மத்திய அமைப்புகளின் பல வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. பஞ்சாப்பில் எனது கட்சி ஊழல் குற்றச்சாட்டினால் பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவை அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் மாநில அமைச்சரவையிலிருந்து சமீபத்தில் நீக்கினார்.

மேலும், எனது கட்சியின் அரசு முன்முயற்சி எடுத்து அமைச்சரைக் கைதுசெய்தது. அதற்குக் காரணம் சரியான ஆதாரம். பஞ்சாப்பில் சுகாதார அமைச்சரின் ஆடியோ பதிவு இருந்தது எந்த விசாரணை அமைப்புக்கும் அல்லது எதிர்க்கட்சிக்கும் தெரியாது. நாங்கள் விரும்பினால் அதை அப்படியே மூடியிருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

ஆனால் அவர்மீது நாங்களே முன்வந்து நடவடிக்கை எடுத்து அவரைக் கைதுசெய்தோம். எனவே, நாங்கள் எந்த விசாரணை நிறுவனங்களுக்காகவும் காத்திருக்கவில்லை, நாங்களே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதேபோலத்தான் சத்யேந்தர் ஜெயின்மீதான வழக்கை நான் ஆய்வு செய்திருக்கிறேன்.

இது முற்றிலும் போலியானது, அரசியல் காரணங்களுக்காக அவர் வேண்டுமென்றே சிக்கவைக்கப்படுகிறார். எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. சத்யேந்திர ஜெயின் உண்மையின் பாதையில் செல்கிறார், அவர் சுத்தமானவராகவே வெளியே வருவார்" எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism