Published:Updated:

புதுக்கோட்டை திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடம்
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடம்

புதுக்கோட்டை மச்சுவாடியைச் சேர்ந்த திமுக பிரமுகர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியைச் சேர்ந்தவர் அருள் ஸ்டாலின்(34). திமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, வீட்டிற்கு வெளியே பலத்த சத்தம் கேட்டுள்ளது. அந்த சமயத்தில் அந்த பகுதியில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு
பெட்ரோல் குண்டு

டூவிலரில் வந்த மர்ம நபர்கள் அருள் ஸ்டாலினின் நுழைவு வாயில் பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றனர்.பலத்த சத்தம் கேட்டு அருள் ஸ்டாலின் வெளியே வந்து பார்த்த போது, நுழைவு வாயில் பகுதியில் கண்ணாடி பாட்டில்கள் உடைந்த நிலையில் கிடந்தது.

சுவர் பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது. உடனே, அனைவரும் சேர்த்து தீயை அணைத்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக விசாரணை நடத்தும் போலீஸார்
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக விசாரணை நடத்தும் போலீஸார்

சம்பவ இடத்திற்கு வந்த கணேஷ் நகர் போலீஸார் பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் திமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அடுத்த கட்டுரைக்கு