Published:Updated:

பெட்ரோல்-டீசல்: ``பாஜக ஆட்சியில் இல்லாத 6 மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை!" - மத்திய அமைச்சர்

பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

``நவம்பர் 21, 2021, மே 22, 2022 ஆகிய தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையில் இரண்டு முறை மத்திய அரசு கலால் வரியை குறைத்தது." - பெட்ரோலியத்துறை அமைச்சர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று பெட்ரோல், டீசல் விலையுயர்வு குறித்து காங்கிரஸ் எம்.பி கே.முரளீதரன் எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த பதிலால் அதிருப்தியடைந்த தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

பெட்ரோல், டீசல் விலையுயர்வு
பெட்ரோல், டீசல் விலையுயர்வு

அதாவது பெட்ரோல், டீசல் விலை குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ``நவம்பர் 2020 முதல் நவம்பர் 2022 வரையிலான காலட்டத்தில் கச்சா எண்ணெய் விலை 102 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த காலகட்டத்தில், இந்தியாவில் பெட்ரோல் விலை 18.95 சதவிகிதமும், டீசல் 26.5 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. மேலும் கச்சா எண்ணெய் விலையுயர்வின் தாக்கத்திலிருந்து இந்தியாவைத் தனிமைப்படுத்த, நவம்பர் 21, 2021, மே 22, 2022 ஆகிய தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையில் இரண்டு முறை மத்திய அரசு கலால் வரியை குறைத்தது. இதன் மூலம் பெட்ரோல் விலையில் ரூ.13, டீசல் விலையில் ரூ.16 குறைக்கப்பட்டது.

பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

மத்திய அரசின் இந்த கலால் வரி குறைப்பைத் தொடர்ந்து, சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பெட்ரோல், டீசல் மீதான வாட் (VAT) வரியை குறைத்தன. ஆனால் பா.ஜ.க ஆட்சியிலில்லாத தமிழ்நாடு, மேற்கு வங்கம், தெலங்கானா, ஜார்கண்ட், ஆந்திரா, கேரளா போன்ற மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கவில்லை. இதனால் அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது" என விளக்கமளித்தார்.

மத்திய அமைச்சரின் இத்தகைய பதிலால் அதிருப்தியடைந்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, பி.ஆர்.எஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.