Election bannerElection banner
Published:Updated:

பி.கே.சேகர்பாபு: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

சேகர்பாபு
சேகர்பாபு

களத்தில் இறங்கி கடுமையாக உழைப்பவர் என்ற பெயரைப் பெற்றவர் சேகர்பாபு. திமுகவில் இணைவதற்கு முன்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளுள் ஒருவராக இருந்தார்.

திமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் சென்னை, துறைமுகம் தொகுதியில், இந்த முறை திமுகவின் வலுவான வேட்பாளராக கருதப்படும் பி.கே. சேகர்பாபுவை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் களமிறங்கியதால், கவன ஈர்ப்பு தொகுதியாக மாறியது. 2021 தேர்தலைத் தவிர்த்து, இத்தொகுதியில் ஏற்கெனவே நடைபெற்ற 16 சட்டமன்ற தேர்தல்களில், 10 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. 1977 முதல் 2011 வரை இத்தொகுதி திமுகவின் கோட்டையாகவே இருந்தது. ஆனால், 2011-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் இணைந்த பழ.கருப்பையா வெற்றி பெற்று, திமுகவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், 2016-ல் நடந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட சேகர்பாபு பெற்றிபெற்று, துறைமுகம் தொகுதியை மீண்டும் திமுக வசமாக்கினார். அந்தத் தேர்தலில் சேகர்பாபு 42,071 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.சீனிவாசனை 4,836 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

சேகர்பாபு
சேகர்பாபு

அ.தி.மு.க.வை தவிர ஏனைய 23 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். களத்தில் இறங்கி கடுமையாக உழைப்பவர் என்ற பெயரைப் பெற்றவர் சேகர்பாபு. திமுகவில் இணைவதற்கு முன்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளுள் ஒருவராக இருந்தார். 2001 மற்றும் 2006 தேர்தல்களில் சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். வட சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பொறுப்பு வகித்த சேகர்பாபு, 2011 ல் திடீர் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

இந்த தேர்தலில் துறைமுகம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட சேகர்பாபுவை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், அமமுகவின் பி.சந்தானகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யத்தின் கிச்சா ரமேஷ், நாம் தமிழர் கட்சியின் அகமது பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் நின்றனர். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லாத மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது திமுக கூட்டணியில் இருப்பதாலும், அதிமுக ஆதரவு வாக்குகளை அமமுக சிதைத்ததாலும் சேகர்பாபுவின் வெற்றி மிக எளிதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு