Published:Updated:

கொரோனா: `என்னை சந்திக்க வருவதைத் தவிருங்கள்..!' - அமைச்சர் செங்கோட்டையன் வைத்த ஃப்ளெக்ஸ்

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் ஒருவர் பாதிக்கப்பட்டு வீடு திரும்பினார். மீண்டும் காய்ச்சல் அடிக்கத் தொடங்கியதால் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பின் ஒரு பகுதியாகத் தன்னை யாரும் பார்க்க வர வேண்டாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டில் ஃப்ளெக்ஸ் போர்டு வைத்துள்ளளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம்காண வைத்திருக்கிறது. சீனாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தொடர்ந்து பதற்றமான நிலை நிலவித் தொற்றிக்கொண்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில், படிப்படியாகக் குறைந்து வந்தாலும், அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு மூன்றாக அதிகரித்துள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா: `என்னை சந்திக்க வருவதைத் தவிருங்கள்..!' - அமைச்சர் செங்கோட்டையன் வைத்த ஃப்ளெக்ஸ்

இந்த நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் ஒருவர் பாதிக்கப்பட்டு வீடு திரும்பினார். மீண்டும் காய்ச்சல் அடிக்கத் தொடங்கியதால் மீண்டும் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் `தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என அவரது வீட்டில் ஃப்ளெக்ஸ் போர்டு ஒன்றை வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மக்களுக்குப் பிரச்னை ஏற்பட்டால் யாரிடம் மனுக்கொடுப்பது என்று கொந்தளிக்கத் தொடங்குகிறார்கள். இன்னொரு பக்கம் இது பலரைப் பாதுகாப்பதற்காக அமைச்சர் சரியான நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இதுகுறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``கொரோனா வைரஸால் உலகமே நிலைகுலைந்து நிற்கிறது. காற்றின் மூலமாகவும் மனிதர்களின் பேச்சுக்கள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுவதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில் ஐ.டி நிறுவனங்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை எல்லோருக்கும் வீட்டில் இருந்து பணி செய்து பாதுகாத்துக்கொள்ள அரசு ஆவன செய்து வருகிறது. இந்த நிலையில் அமைச்சரும் அவரது வீட்டில் தங்க முடிவெடுத்திருக்கிறார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

அவர் வீட்டில் இருக்கிறார் என்றால் அவரைப் பார்ப்பதற்காகத் தினம்தோறும் மக்கள் கூட்டமாக வந்து, பார்த்து மனுக்கொடுத்து விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொள்வார்கள். அதுமாதிரி யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களை தனித்தனியாகப் பார்த்துச் சொல்ல முடியாது அல்லவா? ஒட்டுமொத்தமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த போர்டை வைத்திருக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? மார்ச் 31 வரையிலும் தான் அமைச்சரைச் சந்திக்க வர வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். ஃபர்மனென்டா பார்க்க வர வேண்டாம் என்று சொல்லவில்லையே. நாங்களும் மனிதர்கள்தாம்" என்றார்கள்!

அடுத்த கட்டுரைக்கு