Published:Updated:

தமிழகத்தில் 8 மாதங்களைக் கடந்த திமுக ஆட்சி! - ப்ளஸ் என்ன... மைனஸ் என்ன? | ஓர் அலசல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் ( ராகேஷ் பெ )

ஆட்சி ஆரம்பித்ததுமே முக்கியமான ஐந்து திட்டங்களுக்கான கையெழுத்து, பொருளாதாரம், சமூகநீதியை மேம்படுத்த சிறப்பான குழுக்கள் என அதிரடியாகத் தொடங்கிய தி.மு.க அரசுக்கு சமீபகாலமாக பல்வேறு சறுக்கல்கள். இவற்றை எப்படி எதிர்கொள்ளும் தி.மு.க அரசு..?

தமிழகத்தில் 8 மாதங்களைக் கடந்த திமுக ஆட்சி! - ப்ளஸ் என்ன... மைனஸ் என்ன? | ஓர் அலசல்!

ஆட்சி ஆரம்பித்ததுமே முக்கியமான ஐந்து திட்டங்களுக்கான கையெழுத்து, பொருளாதாரம், சமூகநீதியை மேம்படுத்த சிறப்பான குழுக்கள் என அதிரடியாகத் தொடங்கிய தி.மு.க அரசுக்கு சமீபகாலமாக பல்வேறு சறுக்கல்கள். இவற்றை எப்படி எதிர்கொள்ளும் தி.மு.க அரசு..?

Published:Updated:
முதல்வர் மு.க.ஸ்டாலின் ( ராகேஷ் பெ )

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு பொறுப்பேற்று எட்டு மாதங்கள் கடந்துவிட்டன. தி.மு.க பொறுப்பேற்கும்போது தமிழ்நாடு கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினாலும் பெரிய அளவில் கடனிலும் சிக்கியிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த கையோடு கீழ்க்காணும் திட்டங்களை திமுக அரசு அறிமுகப்படுத்தியது...

* அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனாகால நிதி உதவியாக 4,000 ரூபாய் வழங்கியது.

* ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தது.

* தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என அறிவித்தது.

* தேர்தல் பரப்புரையின்போது 100 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்து மாவட்டம்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகப் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஒரு புதிய துறையை உருவாக்கியது.

* கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களின் சிகிச்சைச் செலவை அரசே ஏற்கும் என அறிவித்தது.

* தமிழ்நாடு அரசின் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு, டீசல் விலையில் மூன்று ரூபாய் குறைத்தது.

* அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கட்சியிலிருந்து நீக்கி, புத்தகப் பையில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களுடனேயே அதை விநியோகிக்கச் செய்தது.

* ஜெயலலிதாவின் பெயரிலிருந்த அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதே பெயரில் செயல்பட அனுமதித்தது...

எனத் தமிழ்நாட்டில் புதிய மாற்றத்துக்கான ஆட்சி உருவாகிவிட்டது என்ற நம்பிக்கை அளிக்கும் வகையிலேயே மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் தொடக்கம் இருந்தது. மேலும், பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், ஆன்மிகம் என அனைத்துத் துறைகளுக்கும் சிறந்த வல்லுநர்களை நியமித்து குழுக்களை அமைத்ததெல்லாம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினர் மத்தியிலும் பலத்த வரவேற்பைப் பெற்றது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சிறப்பான மாநில ஆட்சிக்குக் கேரளாவை உதாரணமாகக் காட்டிக்கொண்டிருந்த அனைவரும் தமிழ்நாட்டை கைகாட்டும் அளவுக்கு ஆரம்பத்திலேயே சமூகநீதி, மக்கள்நலன் தொடர்பாகப் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை தி.மு.க அரசு எடுத்தது. ஆனால், சமீபகாலமாக தி.மு.க அரசின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் மத்தியிலும், ஏன் பொதுமக்கள் மத்தியிலும்கூட அதிருப்திக் குரல்களும்... ஆதங்கக் குரல்களும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

அதன் பின்னணி என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டாவது அலையை மிகத் திறமையாகக் கையாண்டு, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பான திட்டங்களோடு தொடங்கிய தி.மு.க ஆட்சியில் குறுகியகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு... மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்... கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் ரத்து செய்வதில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள்... இவையெல்லாவற்றுக்கும் மேலாகப் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியது மற்றும் பொங்கலுக்குத் தொகை வழங்காதது என இப்படிப் பல்வேறு விவகாரங்களில் தி.மு.க அரசுமீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. மேலும், காவல் நிலையங்களில் பொதுமக்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்படுவதாக எழும் புகார்கள் மற்றும் காவல்துறையினர் மக்களிடம் நடந்துகொள்ளும் விதம் குறித்துக் கூறி, தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன எனக் கூறி தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகின்றன.

கலப்பட பொங்கல் பரிசு
கலப்பட பொங்கல் பரிசு

11அ.தி.மு.க தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமான இடத்தில் விட்டுச் சென்றது. அதைச் சரிசெய்து தேர்தல் வாக்குறுதியில் சொன்னவற்றில் 75 சதவிகித வாக்குறுதிகளை எட்டு மாதங்களுக்குள் நிறைவேற்றியிருக்கிறோம். கடந்தகால ஆட்சியின் தவறுகளைச் சரிசெய்வதிலேயே அதிக காலமும் பொருளாதாரமும் செலவாகின்றன” எனக் கடந்தகால ஆட்சியின் மீது தி.மு.க தரப்பில் எதிர்க்கட்சிகளின் புகாருக்குப் பதிலளிக்கப்படுகிறது…

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல தி.மு.க அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதா என மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம். ``குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்துக்கொண்டு ஓர் அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது எனச் சொல்ல முடியாது. அரசு மாறும்போது புதிதாகப் பொறுப்பேற்கும் அரசுகளுக்கு இப்படியான சிக்கல்கள் தொடக்கத்தில் இருப்பது இயல்பானதுதான். அதை வைத்து ஒட்டுமொத்த அரசையும் அளவிடுவது சரியாக இருக்காது. சமூக வலைதளங்களில் பேசப்படுவதற்கும் அங்கே பேசப்படும், கட்டமைக்கப்படும் கருத்துகளையும் வைத்து அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது என எடுத்துக்கொள்வது சரியான அணுகுமுறையாக இருக்காது. அரசு செயல்படுத்தும் திட்டங்களில் மக்கள் எதிர்பார்த்த விஷயங்கள் பூர்த்தி ஆகவில்லை என்றால் அது தொடர்பான அதிருப்தியை நிச்சயம் மக்கள் வெளிப்படுத்தத்தான் செய்வார்கள். தி.மு.க அரசின் ப்ளஸ், மைனஸ் என்னென்ன என்பவற்றை இப்போதே அளவிட்டுப் பார்ப்பது மிகவும் குறுகியகாலகட்டத்தில் பேசப்படுவதாகும்.

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி

உண்மையில் தி.மு.க அரசுமீது அதிருப்தி இருக்கிறதா இல்லையா என்பது 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்தான் தெரியவரும். அதுவரை அதிருப்தி இருக்கிறது எனச் சொல்வது வெறும் ஊகத்தின் அடிப்படையில்தான் இருக்குமே தவிர ஆதாரபூர்வமானதாக அந்தக் குற்றச்சாட்டை எடுத்துக்கொள்ள முடியாது” எனத் தி.மு.க அரசின் மீதான தனது பார்வையை முன்வைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism