Published:Updated:

`நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் ஆசாத் ஜி!’ - கண்கலங்கிய பிரதமர் மோடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத்
பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத்

``உயர்ந்த பதவிகள் வரும், அதிகாரம் வரும். இதையெல்லாம் எப்படிக் கையாளுவது என்பதை நாம் குலாம் நபி ஆசாத்திடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் மோடி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் இன்றோடு முடிவடைகிறது. அதையடுத்து அவருடன் ஓய்வுபெறும் மற்ற உறுப்பினர்களுக்கும் இன்று அவையில் பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குலாம் நபி ஆசாத் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

பிரதமர் மோடி பேசுகையில், ``உயர்ந்த பதவிகள் வரும், அதிகாரம் வரும். இதையெல்லாம் எப்படிக் கையாளுவது என்பதை நாம் குலாம் நபி ஆசாத்திடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். அவரை நான் ஓர் உண்மையான நண்பராகக் கருதுவேன். குலாம் நபி ஆசாத் ஒரு ஆகச் சிறந்த மனிதர். அவர் வகிக்காத பதவிகள் இல்லை. ஆனால், அவருக்கு எப்போதும் கர்வம் இருந்தது கிடையாது.

``குஜராத்தைச் சேர்த்த சிலர் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கிக்கொண்டபோது, ஆசாத் ஜி-யின் முயற்சிகளையும், பிரணாப் முகர்ஜியின் முயற்சிகளையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். தாக்குதலில் சிக்கியவர்களை அவர் தனது சொந்தக் குடும்ப உறுப்பினர்களைப்போல எண்ணினார்.

எனக்குக் குலாம் நபி ஆசாத் அவர்களை நீண்டகாலமாகத் தெரியும். இருவரும் ஒன்றாக முதல்வர்களாக இருந்திருக்கிறோம். எனக்கு அவரை நான் முதல்வர் ஆவதற்கு முன்பே தெரியும், பேசியிருக்கிறோம். அவர் அரசியலில் தீவிர ஈடுபாட்டிலிருந்தார். அவர், தோட்டக்கலை மீது அதிக ஆர்வம்கொண்டிருந்தார்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசியவர், ``குலாம் நபி -ஜிக்கு பதிலாக மற்றொருவர் இந்தப் பதவிக்கு (எதிர்க்கட்சி தலைவர்) வந்தாலும், அவரின் இடத்தை நிரப்ப முடியாது. காரணம், அவர் தன் கட்சியைப் பற்றி மட்டுமல்ல, இந்த நாடு குறித்தும், இந்த அவை குறித்தும் பெரும் அக்கறைகொண்டிருந்தார்" என்று பிரதமர் பேசினார்.

``நீங்கள் இந்த அவைக்குத் திரும்ப வேண்டும். காங்கிரஸ் உங்களைத் திரும்ப அழைத்து வரவில்லையென்றால், நாங்கள் அதைச் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்தச் சபைக்கு நீங்கள் தேவை’’ என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, அவையின் மூத்த தலைவர்கள் எனப் பலரும் இன்று ஓய்வு பெறுபவர்கள் குறித்துப் பேசிவருகிறார்கள்.

மாநிலங்களவையில் வாழ்த்திய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து தனது கடைசி உரையை வழங்கிய குலாம் நபி ஆசாத், ``இந்தியாவில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுக்குச் செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்கள் குறித்துக் கேள்விப்படும்போது, நான் இந்திய முஸ்லிம் என்பதை நினைத்துப் பெருமைகொள்வேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு