Published:Updated:

சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து மன்னிப்புக் கேட்ட பிரதமர் மோடி - ஏன் தெரியுமா?!

பிரதமர் மோடி

``விதிமுறைகளை நான் பின்பற்ற வேண்டும் என்று என்னுடைய மனசாட்சி சொல்கிறது. அதனால், இப்போது என்னால் உரையாற்ற முடியவில்லை." - மோடி

சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து மன்னிப்புக் கேட்ட பிரதமர் மோடி - ஏன் தெரியுமா?!

``விதிமுறைகளை நான் பின்பற்ற வேண்டும் என்று என்னுடைய மனசாட்சி சொல்கிறது. அதனால், இப்போது என்னால் உரையாற்ற முடியவில்லை." - மோடி

Published:Updated:
பிரதமர் மோடி

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக, தனது சொந்த மாநிலமான குஜராத்துக்குச் சென்றிருந்தார். அங்கு அகமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டியைத் தொடங்கிவைத்தார். பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன்கூடிய 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயிலையும் பிரதமர் கொடியசைத்து, தொடக்கிவைத்தார். காந்தி நகரிலிருந்து அகமதாபாத் வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறிது நேரம் பயணித்து மகிழ்ந்தார்.

வந்தே பாரத் விரைவு ரயிலில் மோடி
வந்தே பாரத் விரைவு ரயிலில் மோடி
ட்விட்டர்

அதன் பிறகு, இன்னும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க சாலை வழியே அகமதாபாத்துக்குச் சென்ற பிரதமர், வேகமாக வந்த ஆம்புலன்ஸுக்காக, தன் பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தி வழிவிட்ட வீடியோ பதிவு வெளியானது. அதைத் தொடர்ந்து, அடுத்த வருட இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் ராஜஸ்தானுக்குச் சென்ற பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டத்திலுள்ள அம்பாஜி கோயிலில் வழிபாடு செய்து, பிறகு அபு சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கு வருகை தந்தார்.

பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதால், இந்தப் பேரணிக்கு பிரதமர் இரவு 10 மணிக்கு மேல் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என்ற சட்டத்தை மதிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி மைக் இல்லாமல் சில நிமிடங்கள் பேசினார்.

அப்போது, ``நான் வந்து சேர்வதற்கு தாமதமாகிவிட்டது. இரவு 10 மணி ஆகிவிட்டது. விதிமுறைகளை நான் பின்பற்ற வேண்டும் என்று என்னுடைய மனசாட்சி சொல்கிறது. அதனால், இப்போது என்னால் உரையாற்ற முடியவில்லை. அதற்காக உங்கள் முன்பு இரு கைகளையும் கூப்பி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நான் மறுபடியும் இங்கு வருவேன். இதோ நீங்கள் எனக்குத் தந்த இந்த அன்பையும், பாசத்தையும், மறுபடியும் வந்து வட்டியுடன் திருப்பித் தருவேன்" என்று பேசினார். இந்த வீடியோ வைரலாகப் பரவிவருகிறது.

மோடி
மோடி
ட்விட்டர்

இந்த நிகழ்வு தொடர்பாக பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் டி.கே.அருணா, "பிரதமர் மோடி எப்போதும் முன்மாதிரியாக செயல்படுகிறார். யதார்த்தமான மற்றும் அடக்கமான செயல்பாடு. மாண்புமிகு பிரதமர் மோடி, ராஜஸ்தானின் அபு ரோட்டில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் இரவு 10 மணிக்குப் பிறகு ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியைக் கடைப்பிடித்து, மைக்கையும் பயன்படுத்தவில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.