Published:Updated:

``எங்களுக்கு 5 ஆண்டுகள் தாருங்கள்... பஞ்சாப்பை முன்னேற்றிக் காட்டுகிறோம்!" - பிரதமர் மோடி

நரேந்திர மோடி ( Narendra Modi )

`காங்கிரஸ் அசல் என்றால், ஆம் ஆத்மி நகல். பாஜக-வுக்கு 5 ஆண்டுகள் தாருங்கள், பஞ்சாப்பில் தொழில்கள் வளர்ச்சிபெறும்... விவசாயிகள் செழிப்படைவர்.' - பிரதமர் மோடி

``எங்களுக்கு 5 ஆண்டுகள் தாருங்கள்... பஞ்சாப்பை முன்னேற்றிக் காட்டுகிறோம்!" - பிரதமர் மோடி

`காங்கிரஸ் அசல் என்றால், ஆம் ஆத்மி நகல். பாஜக-வுக்கு 5 ஆண்டுகள் தாருங்கள், பஞ்சாப்பில் தொழில்கள் வளர்ச்சிபெறும்... விவசாயிகள் செழிப்படைவர்.' - பிரதமர் மோடி

Published:Updated:
நரேந்திர மோடி ( Narendra Modi )

பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் வருகிற பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒருவரையொருவர் தேர்தல் பரப்புரையில் சாடி வருகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி பா.ஜ.க-வுக்கு வாக்குச் சேகரித்தார். அப்போது பேசிய அவர், ``காங்கிரஸ் அசல் என்றால், ஆம் ஆத்மி நகல். ஒருவர் பஞ்சாப்பில் ஊழல் செய்கிறார், இன்னொருவர் டெல்லியில் ஊழல் செய்கிறார். இரண்டு கட்சிகளும் பஞ்சாப்பில் நிழல் குத்துச்சண்டையை விளையாடுகின்றன. நாங்கள் பஞ்சாப்பை, பஞ்சாபியத் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். ஆனால், அவர்கள் வெறும் அரசியலாக மட்டும் பார்க்கிறார்கள்" என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

தொடர்ந்து பேசிய அவர், ``ஒரு காலத்தில் நாட்டின் மகிழ்ச்சியான மாநிலமாக பஞ்சாப் இருந்தது. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. மாநிலத்தின் மீதான கடன் அதிகரித்து வருகிறது, வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளன. பா.ஜ.க-வுக்கு 5 ஆண்டுகள் தாருங்கள், நிச்சயம் பஞ்சாப்பில் தொழில்கள் வளம்பெறும், விவசாயிகளும் செழிப்படைவார்கள்" என்றார்.