Published:Updated:

`பாகிஸ்தான் செய்வதை காங்கிரஸார் செய்கின்றனர்!' - பொதுக்கூட்டத்தில் விளாசிய மோடி

பாகிஸ்தான் செய்வதை காங்கிரஸ் கட்சியினர் கையிலெடுத்திருப்பதாக ஜார்க்கண்ட் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

மோடி
மோடி ( ANI )

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ள மத்திய அரசைக் கண்டித்து வடகிழக்கு மாநிலங்கள் உள்பட நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் மேற்குவங்கம் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை உள்ளிட்டவை அந்தப் பகுதிகளில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

5 ரயில்கள்; 15 பேருந்துகளுக்குத் தீவைப்பு!-குடியுரிமை சட்டப்  போராட்டத்தால் ஸ்தம்பித்த மேற்கு வங்கம்

இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், `இந்தியாவைக் காப்பாற்றுங்கள்' என்ற தலைப்பில் நேற்று பிரமாண்ட கண்டனப் பேரணி நடைபெற்றது. உலக அளவில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கு வெளியேயும் போராட்டங்களை நடத்த காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவு முடிவு செய்திருக்கிறது. அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை, பொருளாதர வளர்ச்சி சரிவு, விவசாயிகளின் நிலை உள்ளிட்ட பிரச்னைகளையும் இதில் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. அதேநேரம், இந்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகள் பாதிக்கப்படாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியிருந்தார்.

இந்தநிலையில், குடியுரிமை சட்ட விவகாரத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வரும்காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரதமர் மோடி. ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ``பாகிஸ்தான் செய்துவந்ததை காங்கிரஸ் கட்சி முதல்முறையாகக் கையிலெடுத்துள்ளது. இந்தியத் தூதரகங்களுக்கு வெளியே இந்தியர்கள் இதுவரை போராடியிருக்கிறார்களா?'' என்று விமர்சித்தார்.

மோடி
மோடி
ANI

குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பேசிய அவர், ``பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இங்குவந்து அகதிகளாக வாழ்ந்துவரும் சிறுபான்மை மக்களுக்கு மதிப்பளிக்கும் சட்டம் இது. அதற்காகவே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

`மத பன்மைத்துவம், பாரபட்சம், ஜனநாயகம்' - குடியுரிமை மசோதாவுக்கு அமெரிக்கா, ஐ.நா-வின் ரியாக்ஷன் என்ன?

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குடியுரிமை சட்ட விவகாரத்தின் வன்முறையைத் தூண்டிவருகின்றன. ஆனால், வடகிழக்கு மாநில மக்கள் வன்முறையை நிராகரித்துவிட்டனர். நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்லும் எந்தத் திட்டமும் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை.காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள், நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரி என்பதையே காட்டுகின்றன'' என்றார்.