Published:Updated:

``மோடி தன் மருத்துவச் செலவுக்காக அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தவில்லை'' - ஆர்.டி.ஐ தகவல்!

பிரதமர் மோடி

பிரதமரின் தனிப்பட்ட மருத்துவச் சிகிச்சைக்கு அரசு பட்ஜெட்டிலிருந்து ஒரு ரூபாய்கூட செலவிடப்படவில்லை.

``மோடி தன் மருத்துவச் செலவுக்காக அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தவில்லை'' - ஆர்.டி.ஐ தகவல்!

பிரதமரின் தனிப்பட்ட மருத்துவச் சிகிச்சைக்கு அரசு பட்ஜெட்டிலிருந்து ஒரு ரூபாய்கூட செலவிடப்படவில்லை.

Published:Updated:
பிரதமர் மோடி

புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் அண்மையில், `பிரதமர் மோடி தன் மருத்துவச் செலவுகளுக்காக அரசாங்கக் கருவூலத்திலிருந்து நிதி எடுக்கிறாரா?' என்று ஆர்.டி.ஐ-யில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், அவருக்கு அந்த ஆர்.டி.ஐ தொடர்பாக தற்போது பதில் கிடைத்திருக்கிறது.

உலகத் தலைவர்கள் வரிசையில் அதிகமாகப் பேசப்படுபவர்களுள் இந்திய பிரதமர் மோடியும் ஒருவர். அவர் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து பல வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். இந்த நிலையில், புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ப்ரஃபுல் சர்தா என்பவர் பிரதமர் அலுவலகத்திடம் ஆர்.டி.ஐ மூலம் "பிரதமர் மோடியின் மருத்துவச் செலவுக்காக அரசாங்கக் கருவூலத்திலிருந்து நிதி எடுக்கப்படுகிறதா?" என்று கேள்வி கேட்டிருந்தார்.

ஆர்.டி.ஐ
ஆர்.டி.ஐ

இந்த நிலையில் இது தொடர்பாக, பிரதமர் அலுவலகத்தின் செயலாளர் பினோத் பிகாரி சிங் அளித்திருக்கும் பதில் மனுவில், ``அலுவலகத்திலிருக்கும் ஆவணங்களின்படி, அவர் 2014-ம் ஆண்டு, மே மாதம் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார். அப்போதிலிருந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். பிரதமரின் தனிப்பட்ட மருத்துவச் சிகிச்சைக்கு அரசு பட்ஜெட்டிலிருந்து ஒரு ரூபாய்கூட செலவிடப்படவில்லை. மருத்துவச் செலவுகளுக்குத் தன்னுடைய சொந்தப் பணத்தையே பயன்படுத்துகிறார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.