Published:Updated:

``தமிழகத்தின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்!” - ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஸ்டாலின் - மோடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளையொட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

``தமிழகத்தின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்!” - ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளையொட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Published:Updated:
ஸ்டாலின் - மோடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 69-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினாவிலுள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார். இவரின் பிறந்தநாளுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ``தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்’’ என்று பிரதமர் மோடி கூறியதற்கு, ``தங்கள் ஒத்துழைப்புடன் நான் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

பினராயி விஜயன், ஸ்டாலின், ராகுல் காந்தி
பினராயி விஜயன், ஸ்டாலின், ராகுல் காந்தி

"எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலுகூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன்" என மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோடி, ஸ்டாலின், கனிமொழி
மோடி, ஸ்டாலின், கனிமொழி

``இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்'' என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

``பெரியார்-அண்ணா-கலைஞர் உள்ளிட்ட முன்னோடிகள் விட்டுச் சென்ற சமூகநீதிப் பாதையில், கழகத்தையும் தமிழகத்தையும் வழிநடத்திச்செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என திமுக எம்.பி கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism