Published:Updated:

``தமிழ்நாட்டில் 1962-க்கு பிறகு காங்கிரஸால் ஆட்சியமைக்கவே முடியவில்லை"- ராகுலுக்கு மோடி பதிலடி!

மோடி - ராகுல்

``தமிழ்நாட்டில் 1962-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸால் ஆட்சியமைக்கவே முடியவில்லை, பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கைவிட்டுப் போன பிறகும் அகங்காரம் குறையவில்லை" - மோடி

``தமிழ்நாட்டில் 1962-க்கு பிறகு காங்கிரஸால் ஆட்சியமைக்கவே முடியவில்லை"- ராகுலுக்கு மோடி பதிலடி!

``தமிழ்நாட்டில் 1962-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸால் ஆட்சியமைக்கவே முடியவில்லை, பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கைவிட்டுப் போன பிறகும் அகங்காரம் குறையவில்லை" - மோடி

Published:Updated:
மோடி - ராகுல்

மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, ``கொரோனாவுக்கு பிறகு உலகில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு பிந்தைய சூழலில் உலகின் தலைமை நாடுகளில் ஒன்றாக இந்திய மாறவேண்டும். அரசுத் திட்டங்களின் மூலம் ஏழைகள் வீடு கட்டி லட்சாதிபதிகளாக மாறி வருகின்றனர். ஏழைத்தாய்கள் சமையல் எரிவாயு திட்டம் மூலம் பயனடையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஏழைகளின் வங்கிக்கணக்கில் பணம் நேரடியாகச் சென்று சேர்கிறது" என பெருமிதமாகப் பேசினார்.

ராகுல் காந்தி - நாடாளுமன்றம்
ராகுல் காந்தி - நாடாளுமன்றம்

தொடர்ந்து பேசிய மோடி, "தமிழ்நாட்டில் 1962-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸால் ஆட்சியமைக்கவே முடியவில்லை. பல மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சியில் அனுமதிக்க மக்கள் விரும்பவே இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பல இடங்களில் கைவிட்டுப் போன பிறகும் அகங்காரம் குறையவில்லை. அரசியல் கட்சிகள் குறித்து மக்களவையில் பேசியதால் அதற்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது" என மக்களவையில் முன்னதாக எம்.பி. ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism