Published:Updated:

``கோட்சேவின் சித்தாந்தத்தை நேரடியாக ஆதரிக்கிறார் மோடி!" - கே.டி.ராமா ​​ராவ் விமர்சனம்

கே.டி.ராமா ​​ராவ் ( ட்விட்டர் )

``பிரதமர் மோடி கோட்சேவின் சித்தாந்தத்தை நேரடியாக ஆதரிக்கிறார்’’ என கே.டி.ராமா ​​ராவ் விமர்சனம் செய்துள்ளார்.

``கோட்சேவின் சித்தாந்தத்தை நேரடியாக ஆதரிக்கிறார் மோடி!" - கே.டி.ராமா ​​ராவ் விமர்சனம்

``பிரதமர் மோடி கோட்சேவின் சித்தாந்தத்தை நேரடியாக ஆதரிக்கிறார்’’ என கே.டி.ராமா ​​ராவ் விமர்சனம் செய்துள்ளார்.

Published:Updated:
கே.டி.ராமா ​​ராவ் ( ட்விட்டர் )

இந்தியாவில் சமீபகாலமாக இந்து - முஸ்லிம் இடையேயான வகுப்புவாத வன்முறைகள் அதிகமாக நடைபெற்றுவருகின்றன. இத்தகைய வன்முறைச் சம்பவங்களைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்துவருகின்றனர். இந்த நிலையில், இத்தகைய சம்பவங்கள் குறித்து டி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ​​ராவ் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், ``நாட்டில் பல்வேறு இடங்களில் வகுப்புவாத வன்முறைகள் நடைபெற்றுவருகின்றன. இந்தச் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்காமல், மௌனம் காத்துவருகிறார். மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேவின் சித்தாந்தங்களை நேரடியாக ஆதரிக்கிறார் பிரதமர் மோடி. சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி நாதுராம் கோட்சே. நீங்கள் (மோடி) பா.ஜ.க-வின் தலைவரோ அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தவாதி மட்டுமல்ல... நீங்கள் ஒரு நாட்டின் தலைவர், இதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பா.ஜ.க-வின் எழுச்சியை எங்கும் காண முடியவில்லை. அதேசமயம் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளன. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டமும், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கமும் அதிகரித்துள்ளது’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism