Published:Updated:

``மொழிபதி னெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்!” - பாரதியின் வரிகளை மேற்கோள்காட்டிய மோடி

அயோத்தி தீர்ப்பால், நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மோடி
மோடி

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன்கிபாத் நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது. இன்று காலை 11 மணியளவில் 59-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

AIR ட்வீட்
AIR ட்வீட்

அப்போது இந்தியாவின் கலாசாரம் மொழி குறித்து பேசியவர் `முப்பது கோடி முகமுடை யாள்

உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்

இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்

எனில் சிந்தனை ஒன்றுடையாள்’

என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மோடி மேற்கோள் காட்டி பேசினார். இந்தியாவில் 30 கோடி முகங்கள் இருந்தாலும் அதன் உருவம் ஒன்றே. 18-க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் அதன் எண்ணம் ஒன்று மட்டுமே என பாரதியார் கூறியுள்ளாக குறிப்பிட்டு மோடி பேசினார்.

``இன்று என்சிசி தினம். இந்த தினத்தில் என்சிசியில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆயுதப்படையின் கொடி நாள் டிசம்பர் 5-ம் தேதியை நாம் மறந்து விடக்கூடாது. அந்த நாளில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். ஃபிட் இந்தியா இயக்கம் ( Fit India Movement) குறித்து உங்கள் அனைவருக்கு தெரிந்திருக்கும். ஃபிட் என்ற வார்த்தையை கேட்டவுடன் ஃபிட்னஸ் பிளான் குறித்து நிங்கள் நினைக்க வேண்டாம் அல்லது கம்ப்யூட்டர், மொபைல் போன்களின் ஃபிட்னஸ் ஆப்களைத் தேடாதீர்கள்.

மோடி
மோடி

டிசம்பர் மாதத்தில் பள்ளிகளில் ஃபிட் இந்தியா வாரம் கொண்டாட அறிவுறுத்தியுள்ளேன். புஷ்கரம், புஷ்கராலு, புஷ்கரஹா உள்ளிட்ட வார்த்தைகளை நீங்கள் கேட்டதுண்டா. இது என்னவென்று உங்களுக்கு தெரியுமா. இருங்கள் நானே கூறுகிறேன். பல்வேறு பெயர்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பாயும் 12 நதிகளில் இந்த விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நதியில் கொண்டாடப்படுகிறது. 12 வருடங்கள் கழித்து மீண்டும் அந்த குறிப்பிட்ட நதியில் கொண்டாடப்படும். கும்பமேளா போன்று 12 நாள்கள் நடைபெறும். கடந்த வருடம் தமிழகத்தில் பாயும் தாமிரபரணி நதியில் கொண்டாடப்பட்டது. இந்த வருடம் பிரம்மபுத்ரா நதியில் நடந்தது. அடுத்த வருடம் தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகாவில் பாயும் துங்கபத்ரா நதியில் கொண்டாடப்படுகிறது.

`அக்கவுன்ட்ல மோடி பணம் போட்டார்னு நெனச்சுட்டேன்!' - வங்கி அதிகாரிகளை அதிரவைத்த இளைஞர்

நண்பர்களே கடந்த மன்கிபாத் நிகழ்ச்சியில் அயோத்தி விவகாரத்தில் 2010-ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து ஆலோசித்தோம். தீர்ப்புக்கு பிறகு நாங்கள் எவ்வாறு அமைதியையும், நல்லிணக்கத்தையும் பராமரித்தோம் என்பதை குறிப்பிட்டேன்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அயோத்தி விவகாரத்தில் நீடித்த சட்டப்போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. நீதித்துறை மீதான மரியாதை நாட்டில் அதிகரித்துள்ளது. இந்த தீர்ப்பு நம் நாட்டின் நீதித்துறையின் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்றுத் தீர்ப்புக்கு பின்னர், நாடு ஒரு புதிய பாதையில் பயணிக்கிறது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்தபின், 130 கோடி இந்தியர்களும் தேசத்தின் நலன் தான் முக்கியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். அனைவருக்கும் நன்றி” என்றார்.