Published:Updated:

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: ``பல ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த உண்மையை வெளிகாட்டியுள்ளது" - மோடி

பிரதமர் நரேந்திர மோடி

`` 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். பல ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த உண்மையை இப்படம் காட்டியுள்ளது" - பாராளுமன்றத்தில் மோடி பேச்சு

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: ``பல ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த உண்மையை வெளிகாட்டியுள்ளது" - மோடி

`` 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். பல ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த உண்மையை இப்படம் காட்டியுள்ளது" - பாராளுமன்றத்தில் மோடி பேச்சு

Published:Updated:
பிரதமர் நரேந்திர மோடி

அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் மற்றும் பலர் நடித்துள்ள 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் மார்ச் 11 அன்று திரையரங்குகளில் வெளியானது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தின் கதை, 1990-ம் ஆண்டு நிகழ்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளின் வெளியேற்றத்தைச் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்தத் திரைப்படத்திற்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மத்தியப் பிரதேசத்தில் கூட 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை பார்ப்பதற்காக காவல்துறைக்கு விடுமுறையளிக்கப்பட்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால் சில முதலமைச்சர்கள் திரைப்படத்தை வெளிப்படையாகவே ஆதரித்தனர். இந்த நிலையில் இன்று பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ்

இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய மோடி,`` 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' மிக நல்ல படம். நீங்கள் அனைவரும் பார்க்க வேண்டும். 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும்.1975 அவசரநிலை அல்லது பிரிவினை போன்ற பல தலைப்புகளில் உண்மையான படங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த உண்மையை இந்தப் படம் காட்டியுள்ளது. உண்மையை மறைக்க முயன்றவர்கள் தற்போது படத்தை எதிர்க்கிறார்கள். இதுபோன்ற படங்கள் மூலம், மக்கள் உண்மையை அறிந்து கொள்வதோடு, கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதை புரிந்துகொள்கின்றனர். யார் சுரண்டினார்கள் அல்லது யார் சரியாகச் செய்தார்கள் என்ற உண்மையை இதுபோன்ற படங்கள் முன்வைக்க முயற்சி செய்கின்றன" என்று பேசினார்.

பாராளுமன்றத்தில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் குறித்து மோடி பேசியிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!