Published:Updated:

Cheetahs: ``சுற்றுச்சூழல், வனவிலங்குகள் பாதுகாப்புக்கான எங்கள் முயற்சி” - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மத்தியபிரதேசத்தில் பிரதமர் மோடி தனது பிறந்தநாள் அன்று குனோ தேசிய பூங்காவில் 8 சிறுத்தைகளை விடுவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளில் நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் இன்று காலை விடுவித்தார். இந்தியாவில் 'சீட்டா' ரக சிறுத்தை இனம் அதிகளவில் வேட்டையாடப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 'சீட்டா' ரக சிறுத்தை இனம் அழிந்துவிட்டது என கூறப்படுகிறது. அதே நேரம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

Cheetahs: ``சுற்றுச்சூழல், வனவிலங்குகள் பாதுகாப்புக்கான எங்கள் முயற்சி” - பிரதமர் மோடி

இதையடுத்து, 5 பெண், 3 ஆண் சிறுத்தைகள் நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி வனத்திற்குள் சிறுத்தைகளை திறந்து விட்டார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், ``இந்தியாவுக்கு சிறுத்தைகள் வழங்கிய நமீபியா நாட்டிற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது சிறுத்தைகள் இந்தியா வந்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்க தருணம் ஆகும். காட்டு வளத்தை இது அதிகரிக்க செய்யும். பல ஆண்டுகளுக்கு முன்னதாக அழிந்து போன இந்த இனம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளது. இந்த சிறுத்தைகளை நமது சுற்றுலா பயணிகள் பார்வையிட சிறிது காலம் காத்திருக்க வேண்டும். இந்த சீட்டாக்கள் குனோ தேசிய பூங்காவிற்கு இன்று நமது விருந்தாளிகளாக வந்துள்ளன. இந்த திட்டமானது சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புக்கான எங்கள் முயற்சி'' என்றார்.