Published:Updated:

``இந்தியா எந்தவொரு நாட்டுக்கோ, சமூகத்துக்கோ அச்சுறுத்தலாக இருந்ததில்லை!"- பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி, ``இந்தியா எந்தவொரு நாட்டுக்கோ அல்லது பிற சமூகத்துக்கோ அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இன்றும்கூட நாம் இந்த முழு உலகத்தின் நலனுக்காகவே சிந்திக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.

``இந்தியா எந்தவொரு நாட்டுக்கோ, சமூகத்துக்கோ அச்சுறுத்தலாக இருந்ததில்லை!"- பிரதமர் மோடி

பிரதமர் மோடி, ``இந்தியா எந்தவொரு நாட்டுக்கோ அல்லது பிற சமூகத்துக்கோ அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இன்றும்கூட நாம் இந்த முழு உலகத்தின் நலனுக்காகவே சிந்திக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.

Published:Updated:
பிரதமர் மோடி

சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக, டெல்லி செங்கோட்டையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மோடி, ``செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் புனித குருத்வார், நமது பண்பாட்டைப் பாதுகாக்க குரு தேக் பகதூர் ஜி எவ்வளவு பெரிய தியாகம் செய்தார் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. அப்போது நாட்டில் மதவெறி புயல் வீசியது. மதத்தை தத்துவம், அறிவியல், சுய சிந்தனை என்று கருதக்கூடிய நம் இந்தியா, மதத்தின் பெயரால் வன்முறை மற்றும் பல அட்டூழியங்களைச் செய்தவர்களை எதிர்கொள்கிறது.

சீக்கிய குரு தேக் பகதூர்
சீக்கிய குரு தேக் பகதூர்

பெரிய பெரிய சக்திகளெல்லாம் மறைந்துவிட்டன. ஆனால் இந்தியா மட்டும் இன்னும் அழியாமல் நிலைத்து நின்று, முன்னேறுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியா எந்தவொரு நாட்டுக்கோ அல்லது பிற சமூகத்துக்கோ அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இன்றும்கூட நாம் இந்த முழு உலகத்தின் நலனுக்காகவே சிந்திக்கிறோம்" எனக் கூறினார்.

உலக வரலாற்றில் மதம், மனித விழுமியங்கள், லட்சியங்கள், கொள்கைகளைப் பாதுகாக்க தன் உயிரைத் தியாகம் செய்த ஒன்பதாவது சீக்கிய குருவாக குரு தேக் பகதூர் அறியப்படுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism